மதுரை பட்டணம்,
#ஸ்ரீமீனாட்சி கோவில்
#தீ விபத்தும்
விபத்து நடந்த சுவாமி சன்னதி,1000 கால் மண்டபத்தின் நடை நடுவே
அமரந்து சுவாமி சுயம்பு சொக்கநாத மூலவரை நோக்கி உள்ள
தொட்டி நந்தியை பற்றியும்,உள்ள வரலாற்று ஆதாரத்தையும்,,
இந்த பயங்கர தீ விபத்தே அந்த நந்தியை சுற்றி உள்ள கடைவரிசை மற்றும்
நடை மண்டப கல் தூண்கள் சேதம் கண்ட போதும் நடந்த அற்புதத்தையும்
பற்றி அறிந்த வரலாறு அறியாத பகுதி
என்ற நுட்பத்தோடு
அருமை அறிவோம்,,,,....
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் மைதீன் ராவுத்தர் என்ற பெரிய சம்சாரி ,
மதுரை கீரைத்துறை என்ற பகுதியில்
குதிரை வளர்ப்பு,& காய்கறி கீரை தோட்டம் என
பெரிய சண்டியராக வாழ்ந்த காலத்தே,
ஊர் முக்கியஸ்தர்கள் பலர் அந்த சண்டியருக்கு மாமூல் தருவதும்
தங்கள் சாதக கண்டயத்தை முடிக்க அவருக்கு கூலி தந்து அடியாட்களை
ஏவச்சொல்வதும் என செல்வாக்கு உயர்ந்த நிலையில்,
முத்து ராக்கு என்ற கன்னிப்பெண் கீரை காய் வியாபாரம் செய்து வர
இவரது தோட்டத்தே மொத்தமாக காய் வாங்குவதும்,
அதை தெரு தெரு வாக சென்று விற்று வருவதும்
கிடைக்கும் லாபத்தே பாதியை,அன்னை மீனாட்சிக்கும் சொக்க நாதருக்கும்
சந்தனம் வாங்கி தருவதுமாக, தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தாள்,
இந்த வழி முறை வாழ்வை அவளுக்கு வகுத்து தந்து ஆசி தந்தவர் ஓர் சிவனருள் சித்தர் என்பதால்,
அந்த வாழ்வியல் வழி முறையே சத்திய வழி என அன்னை மீனாட்சி
திருவருளால் தனது முதிய பெற்றொர்களோடு, வாழ்ந்து வந்த காலத்தே,,
மேலே சொன்ன சண்டியர் மைதீன் பார்வை முத்து ராக்கு மேல் பட
ஆரம்பமானது வில்லங்கம்,,
தொடர்ந்து இவளை வட்டமிட , இவள் விலகி செல்ல,
வேறு தோட்டத்தே காய் வாங்கி விற்பதற்கும் இடையூறு ஏற்பட,
மனமுடைந்து தன்னை ஆசீர்வதித்த தெருவோர பிச்சைகார சிவனடியாரிடம்
முறையிட்டாள்,ஐய்யா தாங்கள் கூறிய படி எனது உழைப்பில் வந்த லாபத்தே
அர்ப்பணிப்போடு தான் அம்மை அப்பனுக்கு சந்தனம் வாங்கி தினம் தினம் கொடுத்தேன்,
இப்போது சோதனையாக என் வியாபாரம் முடங்கி விட்டது,
எவனுக்கும் முந்தி விரித்து இந்த பொழைப்பு பிழைக்க எண்ணமில்லை
மேலும் அப்படி தவறான பாதை வரும் பணத்தே அம்மை அப்பனுக்கு சந்தனம் வாங்கி தரவும் மனமில்லை,,
வாழ்வோ சாவோ நான் ஒழுக்கந்தவற மாட்டேன் என புலம்பினாள்
உடனே சாது அம்மா நீ போ, நாளை உனது சிக்கலை இறைவன் தீர்த்துவைப்பான் என்று அனுப்பினார்,,
மறு நாள் அதிகாலை ஓர் எருது,
பிரம்மாண்ட காளையாக சண்டியர் மைதீன் தோட்டத்தே உள்ள கத்தரி,கீரை செடிகள தின்று துவம்சமிட,
பண்ணை காவல் பணியாளர்களை தாக்கி,காயப்படுத்த,
தகவல் சண்டியர் மைதீனுக்கு போக,
அவரோ சிறந்த ஆயுதமெடுத்து காளையை நேருக்கு நேர் மோத,
அந்த காளை ஒட்டமெடுக்க,
ஓடிவந்து நின்ற இடம் சுவாமி சன்னதி,
அந்த மைதீனும் அங்கே வர காளை கோவிலினுள் சென்று நடை நடுவே
சொக்க நாதனை நோக்கி மண்டியிட்டு,
அமரந்து சிலையாக,
மிரண்டு போன ராவுத்தர் ,, இந்த அற்புத காட்சி கண்டு,தடுமாற
பக்த கோடிகள் ஆனந்தமாய் அதிசயிக்க அந்த இடமே தெய்வீக மயமாக,,
அந்த சாது சித்தர் வந்து அப்பா மைதீன்
மதுரை பட்டணத்தே நல்ல நெறிகளோடு வாழ கற்றுக்கொள்,,
இறைவன் உன்னை ஆசீர்வதிப்பான் என்று கூறி மறைய
அந்த பாய் மெய்சிலிர்த்து எழுதிவைத்த சொத்துக்கள் இன்றும் கோவிலின்
வசத்தே உள்ள நிலையில்
அன்று நடமாடும் காளை என வந்த நந்தி தேவர் இன்று தொட்டி நந்தி என்ற
சுவாமி சன்னதி நடைமாட நந்தீசுவரர்
இந்த தீ விபத்தே மைய்ய பகுதிக்குள் இருந்தாலும்
அவரின் கழுத்து மாலை கூட வாடாமல் உயிர்ப்போடு கண்ட
காட்சி மனித நீ எத்தனை எத்தனை
சூழ்ச்சி செய்தாலும்
அதை தாண்டி சைவ நெறி உயிர்ப்பு மறையாமல் உலகம் காக்கும் என்ற
உயர் உணர்வே எங்களுக்கு,,
வாழ்க சைவ நீதி,! ஓங்குக உயர் நந்தி புகழ் என்றே .
இந்த படத்தே உள்ள நந்தீசுவரரே அந்த நடை நடுவே உள்ள தொட்டி நந்தி,தீ விபத்து முடிந்த பின் உள் சென்று எடுத்த படம் இது!!
No comments:
Post a Comment