POTHU TAGAVAL
B.K.KUMAR
Sunday, July 27, 2025
"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.
அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.🤝🙏🤝
Sunday, September 1, 2024
திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்🛕
திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்🛕
1. வேங்கட மலை:
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.
7. ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். அவர்களில்,
1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்
என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.
1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.
2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.
3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :
கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.
4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.
5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :
இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.
ஓம் நமோ நாராயணா..🛕
Monday, April 8, 2024
*நவகிரகங்களின் சிறப்பு ..!!!*
*நவகிரகங்களின் சிறப்பு ..!!!*
*****************************
*1.#சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
*2.#சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்.
*3 . #அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.
*4.#புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.
*5.#குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
*6.#சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .
*7.#சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.
*8.#ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.
*9.#கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்.
*ஓம் நம சிவய நம ஓம்.✍🏼🌹*
Friday, February 9, 2024
ஒன்பதின்_தத்துவம்
#ஒன்பதின்_தத்துவம்,
#என்ன_என்பதைத்
#தெரிந்து_கொள்ளுங்கள்
பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.
#நவ_சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,
நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி
நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.
நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது
நவமணிகள்:-
நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்
நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்
நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்
நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்
நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்
அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,
(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி
#அடியார்களின்_நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.
#நவ_நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்
#நவ_குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம், முக்கோணம்
#பிரதான_விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்
#நவ_பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்
#நவக்கிரக_தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம்,
9,கீழ்ப்பெரும்பள்ளம்
#நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்
#நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
#நவ_சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.
#நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்
#உடலின்_நவ_துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்
#உடலின்_ஒன்பது_சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
ஓம் சிவாய நமஹ...✍🏼🌹
Saturday, August 12, 2023
செங்காந்தள் மலர் --புற்றுநோயை குணப்படுத்துவதில் தமிழ்நாட்டின் மாநில மலர்..!
புற்றுநோயை குணப்படுத்துவதில் தமிழ்நாட்டின் மாநில மலர்..! ஆராய்ச்சிகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்..!!
செங்காந்தள் மலர்
ஆராய்ச்சிகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்..!!
Saturday, August 5, 2023
வெள்ளை நிற காகிதத்தில் மையூற்றி எழுதப்பட்ட மாயக்காரர்கள்
வெள்ளை நிற
காகிதத்தில் மையூற்றி
எழுதப்பட்ட மாயக்காரர்கள்
ஒரு துளி நீருக்கும்
கிழிந்து போகக் கூடியவர்கள்
கொஞ்சமாய்
அடிக்கும் காற்றுக்கும்
இடம் பெயரக் கூடியவர்கள்
பாசத்தைப் பங்கு போட்டு
பத்திரமாய்
பத்திரப் படுத்தி வைப்பவர்கள்
அவசரத்திற்குத் தேடும் போது
கண்களுக்குத் தென்படா
அரிதானவர்கள்
இணையவழி காதலால்
ஆதாரங்கள் எதுவுமின்றி
உழல்பவர்கள்
வழவழப்பாய்
வண்ண வண்ணமாய்
விதவிதமான காட்சிகளாய்
விலையேறிப் போன
விலைபோகா காகிதங்களாய்
மனிதர்களிங்கு..
தி. இராஜபிரபா
தேனி
Wednesday, August 2, 2023
திருப்பதி லட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
திருப்பதி லட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
திருப்பதி லட்டின் வயது 308; லட்டுக்கு முன் வடை முக்கிய பிரசாதமாக இருந்தது!
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு.
இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும்.
இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது.
இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, நாளை (ஆக.,3), 308 வயதாகிறது. கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.
லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு, வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கோவில் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டுதான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள்.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
திருமலையில் சம்பங்கி பிரதாக்ஷணம் என்னும் இடத்தில் ‘ஸ்ரீவாரி பிரசாதம்’ என்றும், ‘லட்டு பிரசாதம்’ என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு, பிரத்யேகமாக ஒரு மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மடப்பள்ளி ‘பொடு’ என்று அழைக்கப்படும். சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2.80 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப் படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, எம்பெருமான் ஏழுமலையான் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்றும் தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. லட்டுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான ‘பூந்தி’யை தயாரிக்க ‘தெர்மல் ஸ்டவ்’ எனப்படும் 40-க்கும் அதிகமான அதிநவீன அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 750 கிராம் எடையிலான பெரிய லட்டு மற்றும் 175 கிராம் எடையிலான சிறிய லட்டுவும் தயார்செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது.
திருப்பதி லட்டு பிரசாத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?
திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது.
‘கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஒரு நாள் பெருங்செல்வம் படைத்த வியாபாரி, தன் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தால் ஏழுமலையானுக்கு மலை போன்று பிரமாண்டமான லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டி கொண்டாராம். அவருடைய வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றினார். அவர் சொன்னபடி பெரிய லட்டு செய்து இறைவனுக்கு வழங்கினார். லட்டு பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டன. முன்னர் மிராசுதார்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். 1996ம் ஆண்டில் மிராசுதார்களின் உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஒரு லட்டு தயாரிக்கவே 51 பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்தனை பொருட்கள் பயன்படுத்துவதால் மட்டுமே திருப்பதி லட்டின் சுவை தூக்கலாக இருக்கிறது. 5,100 லட்டுகள் தயாரிக்க மட்டுமே 852.5 கிலோ பொருட்கள் பயன்படுத்துகின்றனர்.
லட்டு தயாரிக்க கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள். நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ் தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
பூந்தியை கோயிலுக்கு உள்ளே எடுத்துச் செல்வதற்கும், தயாரிப்பு கூடத்திலிருந்து லட்டுகளை கவுன்ட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கும் கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய், பிரத்யேகக் குழாய் மூலம் கோயிலுக்கு வெளியிலிருந்து உள்ளேயும், கோயிலுக்கு வெளியே உள்ள பூந்தி தயாரிப்புக் கூடத்துக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.
திருப்பதியில் 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
ஆஸ்தான லட்டு
முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப் படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு
கல்யான உற்சவ லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.
புரோகிதம் லட்டு
புரோகிதம் லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக் கப்படுகிறது. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு பிரசாதம் வரலாறு!!
திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருப்பதியில் முதலில் பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் விரைவில் கெட்டுப்போக கூடியவை என்பதற்காக கடந்த 1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு உதிரியாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது. முன்னர், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே முழு லட்டு வழங்கும் நடைமுறை இருந்தது.
1940-ம் ஆண்டிலிருந்துதான் பக்தர்கள் அனைவருக்கும் பூந்திக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு அளவும் குறைந்துவிட்டது. ஆனாலும், சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களைச் சொக்கவைக்கிறது.
இந்த திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. தற்போது, 307 வயதைக் கடந்து, 308 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள திருப்பதி லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தேவஸ்தானம் கணக்கிட்டிருக்கிறது.
புவிசார் குறியீடு
திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவகத்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது.
உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே அளவில் சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.
*whatsapp குழு இணைவதற்கான லிங்க்**
Subscribe to:
Posts (Atom)
"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.
அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...
-
என் காதல் மனைவிக்கு இன்று பிறந்த நாள் 🌺🌺🌺🌺🌺 என்னில் பாதியாய் வாழ்வின் மீதிய...
-
இதில் நீங்கள் எப்படி? உறவின் இடைவெளியில் தந்தையும் மகனும் !! அப்பா : அதிகம் புரிந்து கொள்ளப்படாத உறவு. அப்பாவை திட்டாமல் கடந்து விட்...
-
'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்றார் பாரதியார். 'ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்விய...