Monday, April 30, 2018

*மன அழுத்தம்(TENSION)*

மன அழுத்தத்தை(TENSION) பற்றி கேள்விக்கு
ஓஷோவின் பதில்

அழுத்தம் எப்போதுமே தவறானதல்ல அதை அழகான விதங்களில் பயன்படுத்தலாம். அது
எதிர்மறையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று கிடையாது ஆனால் நாம் அதை
எதிர்மறையானதாக நினைக்கிறோம். அது நல்லதல்ல எனஅறு நினைக்கும்போது அது
பிரச்சனையாகிறது. அழுத்தம் கூட ஒரு படிக்கல்லாக உபயோகமாகும். அது கூட ஒரு
உருவாக்கும் சக்தியாக இருக்கலாம். ஆனால் சாதாரணமாக கடந்த காலத்தில் நமக்கு
அழுத்தம் என்பது கெடுதல் என்று சொல்லித்தரப்பட்டிருக்கிறது. அதனால் எந்த வித
அழுத்ததிற்கும் நாம் பயப்படுகிறோம். மேலும் அந்த பயம் அதை இன்னும்
அதிகமாக்குகிறது. சூழ்நிலைக்கு அது எந்த வகையிலும் உதவுவதில்லை.

உதாரணமாக ஏதோவொரு வெளிப்புற சூழ்நிலை,
அதனால் அழுத்தம் ஏற்படுகிறது. நீ அழுத்தத்தை, பதட்டத்தை உணரும் நேரத்தில் உடனடியாக
நான் தளர்வு செய்துகொள்ளவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என நீ நினைக்கிறாய்,
அந்த பதட்டத்தை பார்த்து பயம் கொள்கிறாய். இப்போது தளர்வு செய்துகொள்ள
முயற்சிப்பது உபயோகப்படாது. ஏனெனில் உன்னால் தளர்வு கொள்ள முடியாது. மாறாக தளர்வு
செய்து கொள்ள முயற்சிப்பது ஒரு புதிய அழுத்தத்தையே உருவாக்கும். அழுத்தமும்
இருக்கும், நீ தளர்வு கொள்ள முயற்சிக்கிறாய், அது முடியவில்லை. இது இந்த
பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கும்.

அழுத்தம் இருக்கும் போது அதை
உருவாக்கும் சக்தியாக பயன்படுத்திக்கொள். முதலில் அதை ஏற்றுக்கொள், அதனுடன்
சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. அதை ஏற்றுக்கொள், அது முற்றிலும் சரிதான். அது
இந்த விஷயம் சரியாக செல்லவில்லை, ஏதோ தவறாக செல்கிறது என்றே சொல்கிறது, நீ இழந்து
விடப் போகிறாய் என்றோ அல்லது வேறு எதையாவதோ கூறுகிறது. உடல் சண்டையிட தயாராகிறது
என்பதன் அறிகுறியே அழுத்தம். ஆனால் நீ தளர்வு கொள்ள முயற்சிக்கிறாய் அல்லது வலி
நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறாய் அல்லது தூக்க மாத்திரை சாப்பிடுகிறாய். நீ
உடலுக்கு எதிராக செல்கிறாய். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு சவால்
அங்கிருக்கும்போது உடல் போராட தயாராகிறது, சவாலை அனுபவி.

சில சமயங்களில் உன்னால் இரவில்
உறங்க முடியவில்லை என்றால் கவலைப்படாதே. அது என்னவென்று கண்டுபிடி. வரும் சக்தியை
உபயோகப்படுத்து. மேலும் கீழும் நட, சிறிது தூரம் ஓடு, சிறிது அதிக தூரம் நட,
அடுத்த நாள் என்ன செய்யவேண்டுமென திட்டமிடு, மனம் என்ன செய்ய விரும்புகிறதோ, அதை
செய். இயலாத விஷயமான தூங்க முயற்சி செய்வதை விட்டு அந்த சூழ்நிலையை ஒரு உபயோகமான
வழியில் செலவிடு. அந்த பிரச்சனையை எதிர்த்து போராட உடல், அது தயார் என்பதை
காட்டுகிறது. இது தளர்வு கொள்வதற்கான நேரமல்ல, அதை பிறகு செய்துகொள்ளலாம்.

மிகச் சரியாக சொல்ல வேண்டுமானால்
நீ உனது அழுத்தத்தை மிகவும் முழுமையாக அனுபவித்து வாழ்ந்தால் தளர்வு ஏற்படுவது
தானே நடக்கும். நீ குறிப்பிட்ட அளவு மட்டுமே அழுத்தம் கொள்ள முடியும், பின் உடல்
தானே தளர்வு கொள்ளும். நீ இடையில் தளர்வு கொள்ள முயற்சித்தால் நீ பிரச்சனையைதான்
உருவாக்குவாய். உடலால் இடையில் தளர்வு அடைய முடியாது. ஒரு ஒலிம்பிக் வீரன்
ஓட்டபந்தயத்திற்கு தயாராக உட்கார்ந்து, விசிலுக்காக காத்திருக்கிறான், விசில்
சத்தம் கேட்டவுடன் காற்றாய் பறக்கிறான். அவன் முழு அழுத்தத்தில் இருக்கிறான், இது
தளர்வு கொள்ளும் நேரமல்ல. அவன் போதை மாத்திரை எடுத்துக்கொண்டால் அது இந்த ஓட்ட
பந்தயத்திற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அல்லது தளர்வு செய்துகொள்வதற்காக
அவன் மகேஷ்யோகி  தியானம் செய்தால் அவன் எல்லாவற்றையும்
இழந்துவிடுவான். அவன் அவனது அழுத்தத்தை உபயோகித்தாக வேண்டும், அந்த அழுத்தம்
உச்சத்தில் இருக்கவேண்டும், அது சக்தி கொடுக்கும், அவன் மேலும் அதிக துடிப்போடும்
வீரியமாகவும் செயல்படுவான். அவன் அந்த அழுத்தத்தை வாழ்ந்து அதை ஒரு எரிபொருளாக,
சக்தியாக உபயோகிக்க வேண்டும்

அதனால் இப்படி முயற்சி செய்து
பார். அழுத்தம் தரும் சூழ்நிலை வரும்போது பயப்படாதே, கத்தாதே. அதனுள் செல், அதை
போரிட பயன்படுத்து. மனிதனுள் அளவற்ற ஆற்றல் உள்ளது, அதை நீ பயன்படுத்தும் அளவுக்கு
நீ அதை அதிகமாக பெறமுடியும்

அதுபோல ஒரு சூழ்நிலை வரும்போது, அழுத்தம் பெறும்போது போரிடு, நீ என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அத்தனையும் செய், அதனுள் ஆழமாக செல். அதை அனுமதி, ஏற்றுக்கொள்,
அதற்கு வரவேற்பு கொடு. அது நல்லதுதான், அது உன்னை போராடுவதற்காக தயார் செய்கிறது.
அதை இப்படி முயற்சி செய்தால் நீ வியப்படைவாய், மிகத் தளர்வான நிலை வரும், அந்த
தளர்வு நிலை உன்னால் ஏற்படுத்தப்பட்டதல்ல. இரண்டு மூன்று நாட்களுக்கு உன்னால்
உறங்கமுடியவில்லை என்றால் பின் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு உன்னால்
எழுந்திருக்கமுடியாது, அது பரவாயில்லை

இந்த உலகில் இரண்டு விதமான
மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று ஓட்டபந்தயக் குதிரை ரகம், மற்றொன்று ஆமை ரகம்.

பந்தயக்குதிரை வித மனிதர்களை விஷயங்களை வேகமாக செய்ய விடவில்லை என்றால் விரைவாக
போக விடவில்லை எனில் அங்கு அவர்களுக்கு அழுத்தம் உண்டாகும். அவர்களுக்கு அதுபோல
ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். நீ பந்தய குதிரை விதம் என்றால் தளர்வு, ஓய்வு
போன்ற விஷயங்களை மறந்துவிடு. அவை உனக்கானவை அல்ல. அவை என்னைப்போன்ற ஆமை வித
மனிதர்களுக்கானவை. ஆமைகள் அனுபவிக்கும் விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷம் தராது. அவை
உனக்கல்ல. உனக்கு சந்தோஷம் தரும் விஷயங்களே வேறு. அதேபோல ஆமை பந்தயக்குதிரைபோல மாற
ஆரம்பித்தால் அதற்கும் அதே பிரச்சனைதான்

நீ சூழ்நிலையிலிருந்து
வெளியேறிவிடலாம். அது சுலபம். சந்தையிலிருந்து வெளியே வந்துவிடு, அதை மறந்துவிடு,
இங்கே வந்து கம்யூனில் இருந்துவிடு என்று மனம் சொல்லும். ஆனால் நீ நன்றாக
உணரமாட்டாய். நீ மேலும் அழுத்தத்தைதான் உணர்வாய் ஏனெனில் உனது சக்தி
வெளிப்படவில்லை

ஆகவே உனது இயல்பை ஏற்றுக்கொள். நீ
ஒரு போராளி என்றால் அந்த வழியில் இரு, அதுதான் உனது சந்தோஷம். பயப்பட அவசியம்
இல்லை. அதில் முழுமையாக ஈடுபடு. சந்தையில் வெளி உலகில் போராடு, போட்டியிடு. நீ
செய்ய விரும்பும் அத்தனையும் செய். விளைவுகளை கண்டு அச்சப்படாதே அழுத்தத்தை
ஏற்றுக்கொள், அழுத்தத்தை நீ ஏற்றுக்கொண்டுவிட்டால் அது அழுத்தமாக இருக்காது.

அது மட்டுமல்ல, நீ மிகவும் சந்தோஷத்தை உணர்வாய் ஏனெனில் நீ அதை பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டாய். அது ஒரு வகையான சக்தி. தளர்வாக இருக்கச் சொல்லும் மக்கள்
பேச்சை கேட்காதே. அது உனக்கானதல்ல. கடின உழைப்பிற்கு பின் தானே நிகழும்
தளர்வைத்தான் நீ பெற்றாக வேண்டும்.

ஒருவர் தான் எந்த விதம் என்பதை
புரிந்துகொள்ள வேண்டும். ஒருமுறை தான் எப்படி என்பதை புரிந்துகொண்டுவிட்டால் பின்
அங்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பின் அவர் தெளிவாக தன் வழியே போய்க்
கொண்டிருக்கலாம். அழுத்தம்தான் உனது வாழ்வின் வழியாக இருக்கலாம்
ஓஷோ
மூலம்: DON’T BITE MY FINGER, LOOK WHERE I
AM POINTING

Sunday, April 29, 2018

*வேலூர்*

(PART - 1) வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போனது மட்டுமல்ல வேலூர்.

சொர்கமே என்றாலும் எங்க
வேலூரை போல வருமா?

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர்.

அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் காங்கேயநல்லூர்.

தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர்.

சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை தயாரித்து தந்த எங்கள் ஊர் குடியாத்தம்.

கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம்.

விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த எங்கள் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்.

தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை.

இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி.

புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம்.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை அடுத்த வேலம்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனை தான் தயாரித்த "பராசக்தி "படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் பிறந்த பூட்டுதாக்கு.

சிந்தனை செல்வர் சி.பி.சிற்றரசுவை தந்த வேலூர்.

"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா "புகழ் ஏ.எம்.ராஜா பிறந்த கிளித்தான் பட்டறை.

பாடகி வாணி ஜெயராம் சொந்த ஊர் வேலூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

மனுநீதி நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பத்மநாபன். IAS பிறந்த ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி.

சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல் "நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய வானொலி நிலைய இயக்குநர் கோபால் பிறந்த ஆற்காடு.

கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரனின் மாமியார் ஊர் சோளிங்கர்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் நடிகை "குமாரி சச்சு "வை தந்த ஆற்காடு அடுத்த புதுப்பாடி.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் "தேனிசை தென்றல் "தேவாவின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த மாங்காடு.

இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை குடியாத்தம் சேகரை தந்த ஊர்.

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அவர்கள் பிறந்த வாலாஜா செங்காடு.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு.

சந்தனம் விளையும் ஜவ்வாது மலை.
சாப்பிட்டு ருசிக்க ஆம்பூர் பிரியாணி.
சுற்றுலா தலமாய் ஏலகிரி மலை.
சுவாமிக்கு தங்க கோயில் உள்ள அரியூர்.

சொர்கமே என்றாலும் எங்க
வேலூரை போல வருமா? 😇😇😇😍😍😍
😎#Nammavellore #நம்மவேலூர் #vellore_Idhu_Namma_Ooru_😝😜

‘’சேமிப்பும், சிக்கனமும்’’

.............................................

கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரம் ஏதென்ஸ் என்றவுடனே நம் நினைவுக்கு வருபவர் தத்துவ மேதை சாக்ரடீஸ் ..

சாக்ரடீஸ் ஒருமுறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.

நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தார்...

மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய
வண்ணம் நடந்து சென்று விட்டார்.

இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.

ஏழாம் நாள் -சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்.,

"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக்  கொண்டே வருகிறேன்.கடைத்தெரு வழியே வருகிறீர்கள் ,கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்,

ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ்,-

அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே .,இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!

இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", எனக் கூறினாராம்.

கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

ஆம்.,தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால் மற்றவரை நாம் பணக்காரர் ஆக்குகிறோம்;

நாம் அதனால் ஏழையாகிறோம்.தேவைப்படும்போது அதை வாங்க முடியாமல் கவலைப்படுகிறோம்!

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.

அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது.சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

ஆம்..!நண்பர்களே.,

தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பும்,
சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ,

அதே அளவிற்கு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அது பயன்படுகிறது.

* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு
ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

சிக்கனமான வாழ்க்கைதான் சீரான வாழ்க்கை’என்பது நம் முன்னோர் சொல்..,

தெ.இரவிச்சந்திரன்🙏

Saturday, April 14, 2018

*மகப்பேறு விடுப்பு*

முதன் முதலில் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு தந்தவர் யார் ?.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 6, 9 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது.

அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து பதவி விலகி விட வேண்டும்.

அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம். மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .

மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப் படுவார்கள். அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்காது .

1942ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனிதாபிமானத்தோடு இப் பிரச்சினையை அணுகினார்.
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை அறிவித்தார். பெண்மையின் அறிவையும் நலத்தையும் ஒருசேர பாதுகாத்தார். சுதந்திர இந்தியாவிலும் அது இன்று வரை தொடர்கிறது .

*அந்த தொழிலாளர்* *நலத்துறை அமைச்சர்*
*டாக்டர் அம்பேத்கர்* .

Friday, April 13, 2018

*மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து*

என் காதல் மனைவிக்கு இன்று
பிறந்த நாள்
🌺🌺🌺🌺🌺
என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்..

என்னை எனக்கு அடையாளம் காண்பித்தாய் .

என் வெற்றியில் நீ
மகிழ்ந்தாய் – தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.

வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்…
என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் …

உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள் பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்கவேண்டும் என்று ..

என்ன பரிசு தர நான்  உனக்கு.
விலைமதிப்பற்ற பொருள் உனக்கு
என்னைத்தவிர உனக்கு
வேறொன்றும் இல்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
எனை
முழுதும் அளித்த பின்னர் வேறென்ன தருவது.
(எப்படியோ தப்பித்தேன்)
இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

என் காதல் மனைவிக்கு இன்று (00.00.0000) பிறந்தநாள் .

Thursday, April 12, 2018

*ட்ரோன்*

ட்ரோன்: அசத்த காத்திருக்கும் அடுத்த தொழில்நுட்பம்

ஒரு ஹோட்டலுக்குப் போகிறோம். ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். சர்வரும் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்கிறார். ஆனால், ஆர்டர் வந்தபாடில்லை. இதற்குப் பதிலாக ஸ்மார்ட்ஃபோன் செயலியில் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு, காதுக்கு அருகே ரீங்காரம் கேட்கும்போது தட்டை எடுத்து மேஜையின் மேல் வைக்கிறோம். ஒரு ட்ரோன் வந்து உணவை சப்ளை செய்கிறது. சர்வருடன் சண்டை போடும் வேலை இதில் இருக்காது.

கொஞ்சம் கற்பனையைச் சிறகடித்துப் பறக்கவைத்தால், பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நம்மூர் டீக்கடைகளில்கூட, வாடிக்கையாளர்களுக்கு ட்ரோன்கள் டீ பரிமாறுவதைப் பார்க்கலாம். இதெல்லாம் சாத்தியமில்லாத மிகைக் கற்பனை என்று தோன்றலாம். ஆனால், எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கத்தான் போகிறது.

இப்போதே ட்ரோன் டெலிவரி தொடங்கிவிட்டது. வருங்காலத்தில் இந்தப் பறக்கும் வாகனங்கள் புத்தக பார்சல் தொடங்கி பீட்சா, மசால் தோசைவரை பலவற்றை வீட்டில் டெலிவரி செய்யும் நிலை வரலாம். மருந்துப் பொருட்கள், பரிசோதனை மாதிரிகளையும் ட்ரோன்கள் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்கலாம்.

திரைப்படப் படப்பிடிப்பிலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துவருகிறது. இவ்வளவு ஏன், நம்மூரில் திருமண நிகழ்வுகளில்கூட விருந்தினர்கள் தலைக்கு மேல் பறந்தபடி ட்ரோன் கேமரா படம் எடுக்கக்கூடும். இன்னும் பல விதங்களில் ட்ரோன்களின் பயன்பாடு விரிவடையக் காத்திருக்கிறது. இதனிடையே ட்ரோன் பந்தயங்களும் பிரபலமாகிவருகின்றன.

எங்கெங்கும் ட்ரோன்

மின்வணிக ஜாம்பவானான அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ட்ரோன் சேவையில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கின்றன. மேலும், ட்ரோன்கள் சார்ந்த புதுமையான சேவைகளை வழங்கக்கூடிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் தரைப் போக்குவரத்தில் நெரிசல் காணப்படுவதைப் போல பறக்கும் ட்ரோன்களால் வானத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். தலையைத் தூக்கிப் பார்த்தால் அங்கும் இங்கும் ட்ரோன்கள் பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல துறைகளில் அவை தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, சரக்குப் போக்குவரத்துத் துறையில் இவை சேவையை விரைவுபடுத்தி நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடி டெலிவரிக்கு மனிதர்களைவிட ட்ரோன்கள் வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இப்படி நம்மை அசத்தவிருக்கும் ட்ரோன்கள் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம்.

ஆளில்லா விமானங்கள்

ட்ரோன் என்றால் ஆளில்லாத சிறிய விமானம் என்று பொருள். ட்ரோன்களில் பல ரகங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் இவை ராணுவச் செயல்பாட்டிலும் உளவுப் பணிகளிலும்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. ஆனால், இன்றைக்கு அந்த வகை ட்ரோன்கள் தனிப் பிரிவாகிவிட்டன. சிவிலியன் ட்ரோன்கள் எனப்படும் அன்றாடப் பணிகளுக்கான ட்ரோன்களில்தான் இப்போது பரவலாகக் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆள் இல்லாத வான் வாகனம் என இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. மென்பொருள், செயலி மூலம் இவற்றை இயக்கலாம். ட்ரோன்கள் பேட்டரி மூலம் இயங்குகின்றன.

அடிப்படையில் இவை இரண்டு வகைப்படும். நிலையான இறக்கைகள் கொண்ட விமான ரகம், சுழலும் இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் ரகம். சுழலும் சக்கர வகையில் நான்கு சக்கரங்கள், ஆறு சக்கரங்கள், எட்டுச் சக்கரங்கள் கொண்ட காப்டர்கள் உள்ளன. பெரும்பாலும் சிவிலியன் பயன்பாட்டில் இந்த வகை காப்டர் ட்ரோன்களைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றின் தலைப் பகுதியில் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். அவை தரும் வேகத்தில் இவை பயணிக்கும். மென்பொருளைக்கொண்டு பறக்கும் திசை உள்ளிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். எந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும், எங்கே செல்ல வேண்டும் எனும் கட்டளைகளைச் செயலி மூலம் பிறப்பிக்கலாம்.

புதுமைச் சாதனம்

ட்ரோன்களால் பறக்க முடியும், அவற்றை இயக்குவதும் எளிது. எனவே, இவற்றின் கைகளில் பொருட்களைக் கொடுத்து புரோகிராம் செய்தால், குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத் திரும்பி வந்துவிடும் எனும் கருத்து மிகப் பெரிய ஆர்வத்தைக் கிளறிவிட்டது. ஆனால், நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டுவருமா எனும் சந்தேகம் இருந்ததால் பரிசோதனை முறையில் கையாண்டு பார்க்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற பரிசோதனைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ‘ட்ரோன் டெலிவரி’ எனும் கருத்தாக்கம் நிலைபெறத் தொடங்கியது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்தான் பரிசோதனை முறையில் முதல் ட்ரோன் டெலிவரி 2013-ல் வெற்றிகரமாக அரங்கேறியது. பிளர்ட்டே (Flirtey) எனும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம், ஜுக்கல் (Zookal) எனும் புத்தக வாடகை சேவை நிறுவனத்துடன் இணைந்து, இணையம் மூலம் புத்தகம் ஆர்டர் செய்பவர்களுக்கு ட்ரோன் மூலம் அனுப்பிவைத்தது. அதன் பிறகு, இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவுசெய்துகொண்டு, ட்ரோன் சார்ந்த முயற்சிகளில் பெரிய அளவில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்காவில் 2015-ம் ஆண்டு அமேசானை முந்திக்கொண்டு வர்த்தக நோக்கிலான ட்ரோன் டெலிவரி பரிசோதனையில் இந்நிறுவனம் ஈடுபட்டது. இந்தப் பரிசோதனையின்போது மருத்துவப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து உணவகத்தில், மருத்துவ சேவையில் என ட்ரோன்களின் பயன்பாடு கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. சரக்குப் போக்குவரத்து மட்டுமல்ல விவசாயம், அகழாய்வு, பேரிடர் கால மீட்புப் பணிகள், ஏரியல் போட்டோகிராபி என இன்னும் பல துறைகளில் ட்ரோன்களுக்கான வெள்ளோட்டம் தொடங்கியிருக்கிறது.

எச்சரிக்கும் ஆபத்துகள்

இப்படி ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்துவந்தாலும் சவால்களும் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. டெலிவரிக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தும்போது கட்டுப்பாடு, பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கின்றன. ட்ரோன்கள் அந்தரங்க உரிமையை மீறும் ஊடுருவலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. தலைக்கு மேல் பறக்கும் ட்ரோன்கள் ஆபத்தாகவும் அமையலாம். எனவே, ட்ரோன் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு, உரிமம் பெறுதல் போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. உளவு பார்க்கும் நோக்கில் எதிரிகளால் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் எனும் அச்சமும் இருக்கிறது. ட்ரோன் துப்பாக்கி போன்ற வில்லங்க சங்கதிகளும் உலாவர ஆரம்பித்திருக்கின்றன.

இந்தச் சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே, நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாகக் கிடைத்திருக்கும் ட்ரோன்களை மனித குலத்தின் நலனுக்காக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும்.

நன்றி: தமிழ் ஹிந்து

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...