Wednesday, November 28, 2018

*மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...*

*60 வயசுக்குள் நாம் என்ன சாதித்து காட்டுகிறோம் என்பது தான் மிக முக்கியம்* ! 😁

MUST READ AND FOLLOW THIS

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*

         20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்) 

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)

50 வயசுக்கு அப்புறம் அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும் இந்த வயசில் முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)

80 வயசுக்கு அப்புறம் பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)

90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

*அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..*

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்!

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் *The power of positive thinking* என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...*

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா ?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

Feel the  power of  positive Thinking... *That is the BIGGEST SECRET OF LIFE...*
🙏

Tuesday, November 27, 2018

*40 வயதும்_இரண்டாம் இன்னிங்கஸ்தான்*

இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.

10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்.....  40 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!!

40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1.  புதியதை தேடுங்கள்:  சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்..... 40களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்...... எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

2.  இளைஞர்களோடு பழகுங்கள்:  40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்...... உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்!!!!! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்.....
அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்!!!

3.  அழகாக உடை உடுத்துங்கள்:  அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்!!!!! 40 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான்!!!!! உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 40+கார்கள்தான் அதிகம்!!!!

4.  பயணம் செல்லுங்கள்:  உடனே 40+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்!!!!! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்!!!!! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்..... இல்லையென்றால், 40 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 50 வயதில் கிழவனாகி விடுவீர்கள்!!!

5.  நிறைய படியுங்கள்:   மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்..... தேர்வு செய்து படியுங்கள்!!!  புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்..... அவர்கள் பேச்சை கேளுங்கள்.

அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 40+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!!!!!

மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது?????

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்    பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 40+ கார்ராக இருந்தால் தாமதிக்காதீர்கள்!!!!

இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்!!!!!

👍👍👍🙏🙏🙏

*ஊசியும்_நூலும்*

#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

#பார்த்தேன்” என்றார் பரமன்.

#பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

#அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”

#ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

#வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

#முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

#சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

#மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

#அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

#முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

#அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

#முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

#இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

#ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

#அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

#முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

#இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்.

#தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

#திருச்சிற்றம்பலம்.

Friday, November 23, 2018

*பண்பாடு*

பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. அதனாலேயே திருமணமானவர்கள் மட்டுமே மோதிரவிரலில் மோதிரம் போடுவது.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரது. லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
இதுவே வளைகாப்பு நிகழ்வுக்கு காரணம்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சமந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வயிற்று சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் . மற்றும் உஷ்ன வாயுவையும் வெளியேற்றுகிறது.

கொலுசு :
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.

பில்லாலி
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

Wednesday, November 21, 2018

*GMail-offline*

Wednesday, November 21, 2018

இன்டர்நெட் இல்லாமல் G.mail எப்படி பயன்படுத்துவது 2018




இன்டர்நெட் இல்லாமல் ஜி மெயில் எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா, Google ஆனது Gmail ஐ ரி டிசைன் செய்து, அதனுடன் பல புதிய அம்சங்களைச் சேர்த்தது.

ஆட்டோபிசியால் இன்டெலிஜென்ஸ் அடிப்படையிலான அம்சங்கள் Gmail யில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் இது தவிர, ஒரு சிறப்பு அம்சம் உங்கள் ஜிமெயில் சேர்க்கப்பட்டது மற்றும் இது ஆஃப்லைன் சப்போர்ட் ஆகும். இந்த அம்சத்தின் கீழ், நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் Gmail இயக்கலாம்.




இந்த புதிய அமசத்தின் மூலம் நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் ஈமெயில் படிக்கலாம், இதனுடன் உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பினாலும் உங்கள் G.மெயில் இன்பாக்சுக்கு வரும், இதனுடன் நீங்களும் இன்டர்நெட் இல்லாமலே மெசேஜை அனுப்பலாம் இதனுடன் நீங்கள் மேலும் பல வேலைகள் செய்யலாம் என்னவென்று கேட்டல் உங்களுக்கு தேவை இல்லாத ஈமெயில் டெலிட் செய்யலாம்





இந்த அம்சத்திற்கு நீங்கள் Chrome ப்ரோசெசர் பதிப்பு 61 தேவை. இந்த புதிய அம்சத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்

ஸ்டேப் 1 முதலில் கிரோம் 61 டவுன்லோடு செய்ய வேண்டும்

ஸ்டேப் 2 ஜி மெயில் மேலே வலது பக்கத்தில் சென்று gear-like Settings க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப் 3 கீழே ட்ராப் செய்து நீங்கள் மெனுவில் செல்ல வேண்டும் பிறகு செட்டிங்கில் க்ளிக் செய்ய வேண்டும்


ஸ்டேப் 4 இப்பொழுது மெனுபாரில் சென்று Offline க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப் 5 'Enable offline mail' ஒப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்

இது போல நீங்கள் எளிதாக இன்டர்நெட் இல்லாமல் எளிதாக G- மெயில் பயன்படுத்தலாம்

Share

 

No comments:

Post a Comment

Home

View web version

Powered by Blogger.

*சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது?*

Dont miss to Read
📗📘📙📓📔

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ”

இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம்  போகும்போது  சிறிதும்   அள்ளிச்செல்ல முடியாது 😎
🌷🍀🌹🌻🌺🍁

- படித்ததில் பிடித்தது.

Tuesday, November 20, 2018

*முதுமை + தனிமை*=*கொடுமை*

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
*பீக் hour சார்ஜ்*
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*

🤔🤭🤫😰😥😓😦😪

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...