Thursday, December 22, 2022

*‘கணிதமேதை’ இராமானுஜர் பிறந்த தினம் இன்று*

_*‘கணிதமேதை’ இராமானுஜர் பிறந்த தினம் இன்று*_ 



 *‘கணிதமேதை’ இராமானுஜன் பிறப்பு* 
 
‘கணிதமேதை’ இராமானுஜன் வறுமையே சொத்தாயிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இராமானுஜன். 

தந்தை பெயர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார். தாய் கோமளம். பிறந்தது ஈரோட்டில் தாய்வழிப் பாட்டி வீட்டில் (1887 டிசம்பர் 22) என்றாலும் ஒரு வயதிலிருந்தே வளர்ந்து வாழத் தொடங்கியது சொந்த ஊரான கும்பகோணத்தில் தான்.

இராமானுஜன் படிப்பில் படுசுட்டி. அபார நினைவாற்றல் உடையவர். 

படிக்கிற காலத்தில் ஒரு புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்து விடுவார். 


ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது பள்ளியில் மட்டுமல்ல ஊரிலேயே முதல் மாணவன் அவர்தான்.

கணக்கில் புலி. அப்பாவுக்கு துணிக்கடையில் கணக்குப் பிள்ளை உத்யோகம். மாத சம்பளம் இருபது ரூபாய். 

அந்தச் சொற்ப ஊதியத்தில்தான் குடும்பம் தன்னுடைய சாப் பாடு, துணிமணி மற்றும் வீட்டுச் செலவுகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை. 

இராமானுஜத்துக்குப் பசி பழகி விட்டிருந்தது. 

 *‘கணிதமேதை’ இராமானுஜன் கணக்கில் புலி* 

பசியில் வாடினாலும் உணவுக்குப் பதில் கணக்குதான் அவருடைய சிந்தனையில் இருந்தது. 

உறங்கினால் கனவிலும் கூட கணக்குத்தான் வந்தது அவருக்கு. தனிமை நாடி கோயிலுக்குச் செல்கிறவர் அங்கேயே களைத்துச் சோர்ந்து கிடப்பார்.

அவரைச் சுற்றிலும் கணக்குகள் போடப்பட்டிருக்கும். வீட்டில் எப்போது பார்த்தாலும் சிலேட்டில் கணக்கு செய்து கொண்டிருப்பது அவருடைய பழக்கம். அந்தப் பழக்கம் வாழ்க்கை நெடுகிலும் இருந்தது.


கும்பகோணத்தில் அவருடைய வீட்டில் சில மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் மூலம் வெளிநாட்டுக் கணிதமேதைகள் எழுதிய நூல்கள் அவருக்குப் படிக்கக் கிடைக்கும்.

லோனி என்பவர் எழுதிய ‘கோணம்’ என்ற கடினமான நூல் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. அவற்றிலுள்ள கணக்குகளுக்கு எல்லாம் அவர் விடை கண்டுபிடித்திருக்கிறார். ‘கணிதச் சுருக்கம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த கணக்குகளுக்குப் பதிலாய் பல புதிய சூத்திரங்களை இராமானுஜன் உருவாக்கிக் காட்டினார்.

நண்பர்கள் அவருடைய திறமையை வியந்து பாராட்டினர். 

இராமானுஜன் கணித பாடத்தில் அதிக அக்கறை காட்டியதால் மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டுத் தேர்வில் (எஃப்.ஏ) தோற்றதால் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் போயிற்று. 

ஒருபக்கம் பசி பட்டினி, மறுபக்கம் உடற்பிணி. இரண்டுடனும் போராடிக் கொண்டுதான் அவர் தமது கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 

 *இராமானுஜன் திருமண வாழ்க்கை* 

அந்நிலையில் 1909 ஆம் ஆண்டு ஜானகி என்ற பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. 

அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. குடும்பம் நடத்துவதற்கான முதிர்ச்சி இல்லை, என்றாலும் பாரம் சுமந்தாக வேண்டுமே. 

 *இராமானுஜனின் வறுமை* 

வேலை தேடி சென்னை சென்றார் இராமானுஜன் அங்கே துறைமுகம் கழகத்தில் வேலை கிடைத்தது. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்துவதில் சிரமம்.

ஆனாலும், தம்முடைய நிலை குறித்து வருத்தமேதுமின்றி கணித ஆராய்ச்சியில் மனமொன்றி விடுவார் அவர். 

தம்முடைய ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிடுவார்.

அவ்விதமாய் அவருடைய பெயர் வெளிநாடுகளில் பரவத் தொடங்கியது. ஊக்குவிக்கும் மனிதர்களும், பண வசதியும் இருந்திருந்தால் அவர் எப்போதோ உலகப்புகழ் பெற்றிருப்பார்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும் ஒற்றை ஆளாய் நின்று முயற்சிகள் மேற்கொண்டார். 

இராமானுஜனின் திறமையை முதலில் அடையாளம் கண்டவர் கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) பல்லைக் கழகப் பேராசிரியர் ஜி.எச். ஹார்டி என்பவராவார்.

1914-ல் ஹார்டியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றார் இராமானுஜன். 

அவருக்கு 250 பவுண்ட் உதவித் தொகையுடன் ட்ரினிட்டி கல்லூரியில் படிப்பு, ஆராய்ச்சி தொடர அவரே ஏற்பாடு செய்தார்.

அத்துடன் இந்தியாவில் இருந்த இராமானுஜனின் மனைவிக்கு 10 பவுண்ட் அனுப்பி தரவும் வகை செய்தார் அவர். 

1912-ல் தாம் எழுதி வைத்திருந்த கணிதக் குறிப்பு களை ஹார்டியிடம் காணபித்தார் இராமானுஜன்.

1894-ல் ரோஜர் என்ற கணிதமேதை வெளியிட்டிருந்த கணிதக் குறிப்புகளைவிட அவை சிறப்பா இருந்ததைக் கண்டார் ஹார்டி. 

இராமானுஜனின் கணிதத் திறன் இங்கிலாந்திலுள்ள கணிதப் பேராசிரியர்களை வியப்படையச் செய்தது. 

 *இராமானுஜனின் கணித ஆராய்ச்சிகள்* 

 ஹார்டியுடன் இணைந்து கணிதத்தில் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். 

1918-ல் லண்டன் “ராயல் சொஸைட்டி’ இராமானுஜத்தைத் தங்கள் கழகத்தில் உறுப்பினராக்கி கொண்டது.

எஃப்.ஆர்.எஸ் (Fellow of Royal Society) விருது வழங்கிக் கவுரவித்தது. லண்டன் சீதோஷ்ண நிலை அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

 *இராமானுஜனின் மரணம்* 

உடல்நிலை கடுமையாய் பாதிக்கப் பட்டது. ஹார்டி உள்ளிட்ட பேராசிரியர்கள் அவரைக் குணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஒரு  
பலனளித்தது. இராமானுஜன் இந்தியா திரும்பினார்.

இங்கே அவர் நீண்ட காலம் வாழவில்லை. ஆயினும், மருத்துவ சிகிச்சை பெற்ற நாட்களிலும் கூட தம்முடைய கணித ஆராய்ச்சியை அவர் தொடர்ந்திருக்கிறார். இருந்தென்ன, 1920 ஏப்ரல் 26-ஆம் நாள் காலம் அவரைக் கைவிட்டு விட்டது.

இறுதி மூச்சு நிற்கிற கணத்திலும் கையில் கணித நோட்டுடனும், பேனாவுடனும் இருந்தார் அவர். 33 வயது என்பது கொஞ்சந்தான். ஆனால், அந்த வயதிற்குள் வேறெந்த அறிவியல் மேதையும் பெற்றிருக்க முடியாத பெரும் புகழை இராமானுஜன் பெற்றுவிட்டார்.


🌷🌷

*🌺ரத்தத்தில்_சர்க்கரை* # *குறைவது_ஏன்……*

*🌺ரத்தத்தில்_சர்க்கரை* 
# *குறைவது_ஏன்……* 

 *#என்ன_காரணம்…* 



இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. 

இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது……

👉தாழ் (குறை) சர்க்கரை மயக்கம் 
( Hypoglycaemic Coma )

 *ரத்தத்தில் சர்க்கரை குறைவது ஏன்* 
 *என்ன காரணம்…* 

இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள 
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒரு முறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள்…… 

⏩உணவுக் கட்டுப்பாடு, 

⏩மாத்திரை, 

⏩இன்சுலின் ஊசி 

ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

 *எது* *தாழ்(குறை)சர்க்கரை* 

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். 

ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. 

ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். 

சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். 

இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

 *எப்படி வருகிறது* 

சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 

5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். 

வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.

ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். 

👉இதன் விளைவாக…… 

♦மூளை செல்கள், 

♦மூளை நரம்புகள் 

⭐குறிப்பாக…… தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். 

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற 
#குளுக்ககான்_ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

 *அறிகுறிகள்_என்ன* 

 *ஆரம்ப அறிகுறிகள்* 

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

👉உடல் அதிகமாக வியர்ப்பது.

👉உடல் குளிர்ச்சியாக இருப்பது.

👉உடல் தளர்ச்சி.

👉படபடப்பு.

👉உடல் நடுக்கம்.

👉அதிகப் பசி.

👉தலைவலி.

👉தலைசுற்றல்.

👉பார்வை குறைவது.

👉இதயத் துடிப்பு அதிகரிப்பது.

 *அடுத்த_கட்ட_அறிகுறி……* 

> ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.…

l பேச்சு குழறுதல்.

l மனக் குழப்பம்.

l அரை மயக்கம் (Semiconsciousness).

 *இறுதி கட்ட* *அறிகுறிகள்* 

l வலிப்பு வருவது.

l முழு மயக்கம் (Unconsciousness).

l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

 *முழு மயக்கம்* *ஏற்பட்டால்* 

முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.

♦டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

 *எச்சரிக்கையாக* *இருக்க* *வேண்டியவர்கள்* 

வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

 *குழந்தைக்கு ரத்தச்* *சர்க்கரை* *குறைந்தால்* 

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். 

*குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை*
*குறைய ஆரம்பித்துவிட்டால்*

👉குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும்.…>>👇 

> அதிகம் பசிக்கும், 
வியர்க்கும், 

> படபடப்பு வரும், 

> நாக்கு உலரும், 

> உடல் நடுங்கும், 

> பார்வை குறையும். 

> குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும் 

> குழப்பமான மனநிலையில் இருக்கும். 

> இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்

> மயக்கம் வரும் சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.

 *தடுப்பது எப்படி* 

l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.

l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.

l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.

l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.

l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

 *தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது* 

l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.

l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.

l தாமதமாகச் சாப்பிடுவது.

l விரதம் இருப்பது.

l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.

l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.

l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.

l வெறும் வயிற்றில் மது அருந்துவது.

 *யாருக்கு வருகிறது* 

கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.

l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.

l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.

l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)

l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.

l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

 *இவர்கள் என்ன* *செய்ய வேண்டும்* 

❔கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்❔

l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.

l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

 *என்ன_முதலுதவி* 

தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி……?

l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து 
‘தாழ் (குறை) சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.

l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.

l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.






🪷🪷🪷

Saturday, December 17, 2022

தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!

தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!





அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும்  அந்த அனுபவமும் கூட இருக்கும்..!
அது ஏன்?

உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!

மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.

ஒன்று விரைவான கண் அயர்  இயக்கம்
(RAPID EYE MOVEMENT @REM)

மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM @NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.

அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே  மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.

ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.

அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள்  உடல் இன்னும்  தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.!

REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம்  உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...
உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.

மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது (இரண்டாவது படம் பார்க்க).

அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க  ட்ரைப்  பண்றேன்  ஆனா என்னால முடியலயே  பேய்  வந்து அமுக்குது போல" என்று.!
சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து  கொண்டிருக்கும்  கணவும்  பேய் நினைப்புக்கு சென்று  ஒரு பேயையும்  கணவில் கொண்டு வந்து காட்டும்..!

SLEEP PARALYSIS -  என்பதுதான்  உங்களை வந்து  அமுக்கிய பேய்.!
உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.!
உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழ்கிறது... அதனால் பயப்பட ஏதும்  தேவை இல்லை..!!!

பிடிச்சா லைக் பண்ணுங்க..!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க..!

சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்க.!

#உறங்கும்போது #பேய் #அமுக்குகிறதா #மருத்துவ_மகிமை...

ஆரோக்கிய தினம்

*அனைவருக்கும் ஆரோக்கிய தின வாழ்த்துக்கள்*
🄷🄰🄿🄿🅈 🄸🄽🅃🄴🅁🄽🄰🅃🄸🄾🄽🄰🄻
🄷🄴🄰🄻🅃🄷   🄳🄰🅈
மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
1. பிபி: 120/80
2. துடிப்பு: 70 - 100
3. வெப்பநிலை: 36.8 - 37
4. மூச்சு: 12-16
5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18
பெண் - 11.50 - 16
6. கொலஸ்ட்ரால்: 130 - 200
7. பொட்டாசியம்: 3.50 - 5
8. சோடியம்: 135 - 145
9. ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40%
11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115
12. இரும்பு: 8-15 மி.கி
13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000
14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000
15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன்.
16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL
17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml.
18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி.

*ஆரோக்ய தின வாழ்த்துக்கள்*

Sunday, November 20, 2022

*போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு தவிர்த்தல்*

முக்கியச் செய்தி*

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது! பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, பட்டா* மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, 
உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது 
*பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், 
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். 
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 
தவறு செய்யும் விஏஓக்களை 
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை 
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. 
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
*பட்டாவை* வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம *நத்தம்* நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. 
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு 
பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய 
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். 
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) 

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும். 

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court 

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் 
*பட்டா* மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை,  பதிவுகளை
 
மக்களுக்கு விழிப்பு உணர்வு
ஏற்படுத்துங்கள்
*இந்திய வழக்கறிஞர் சங்கம்*

என்றும் தேசப் பணியில்
கோடீஸ்வரன்
மாவட்ட துணை தலைவர்
மத்திய அரசு நல திட்ட பிரிவு
தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday, August 31, 2022

விநாயகரின்_அறுபடை_வீடுகள்

விநாயகசதுர்த்தி விழா 31-08-2022 இனிமையாகட்டும்.. 




#விநாயகரின்_அறுபடை_வீடுகள்

தம்பிக்கு  அறுபடை வீடுகள் இருப்பதுபோல்  அண்ணனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன   அதுபற்றி இங்கே பார்ப்போம்

முதல்படை வீடு     

திருவண்ணாமலை 

இங்குள்ள விநாயகரின் பெயர் ” அல்லல் போம் விநாயகர்” இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடலே ” அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்” என்பதாகும்.

இரண்டாம் படைவீடு      

விருத்தாச்சலம் 

இங்குள்ள  அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ” ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார். இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம் கல்வி சீரான வாழ்வு அமையும்.

மூன்றாம் படைவீடு  

திருக்கடவூர்

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு ” கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார். அபிராமி பட்டர்  அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

நான்காவது படைவீடு    

மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில்
” சித்தி விநாயகர்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. காட்சியாக மதுரையை நினைவுபடுத்தும் முக்குருணி விநாயகர்.. 

ஐந்தாவது படைவீடு     

காசி மற்றும் பிள்ளையார்பட்டி

காசியில் ” துண்டி ராஜ கணபதி”யாகவும், பிள்ளையார்பட்டியில் ” கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார். காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார்  காசிக்கு போகமுடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

ஆறாம்படைவீடு      

திருநாரையூர்

இங்கு ” பொள்ளாப்பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம். இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்பியாண்டார் நம்பிகளும் அவதரித்தார்.

 கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக.

Thursday, August 4, 2022

வாழ்க்கை பயணம்

ஒருவர் முதலில் சிறியதாக 
*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.
பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*



ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.
*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*
வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.
*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*
*ஏன் என்னாச்சு.?*
பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*
எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*
நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*
அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.
 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*
அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 
*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.
அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 
*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*
அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*
அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.
*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*
அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 
*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*
சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*
*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியாள் கேட்டான்.*
வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 
*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*
உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.
பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 
*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*
கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 
இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*
அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 
*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*
யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.
அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.
*அவர் திடுக்கிட்டுப் போனார்.*
*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*
அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.
மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*
ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 
*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*
*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*
அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 
அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 
*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*
மரண தேவதை ஒப்புக்கொண்டது.
*அவர் இப்படி எழுதினார்.*
உங்களுக்கான நேரத்தை. 
*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*
என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.
 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*
இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*
அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 
*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*
விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*
*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*
அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*
அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 
*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*
ஆதலால்
தயவுசெய்து வாழ்க்கையை வாழுங்கள்,நொடிக்கு நொடி கொண்டாடுங்கள், பேரானந்தமாக இருங்கள்,மனைவி,குழந்தை,கணவன்,அப்பா, அம்மா,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,ஆடு,மாடு,கோழி,வயல்வெளி,பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய நிறைய நிறைய நேரங்களை ஒதுக்கி  வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ரசித்து ஜாலியாக வாழ முடிவெடுங்கள் நண்பர்களே 😍🙏🏻⭐️



*இனிய இரவு வணக்கம்*

Saturday, July 30, 2022

பழமொழிகளும் தவறானப் புரிதல்களும்...

பழமொழிகளும் தவறானப் புரிதல்களும்...





1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள்:-

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.

உண்மையானப் பொருள்:-

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையானப் பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:-

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான பொருள்:-

'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்துப் பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள்:-

ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:-

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயைப் போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.

பொருள்:-

தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்றுக் கொண்டு,  மறந்து விட வேண்டும்.

உண்மையான பொருள்:-

களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீயப்பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டியப் பெண்ணை நம்பாதே...

பொருள்:-

சேலைக் கட்டும் பெண்களை நம்பாதே.

உண்மையான பொருள்:-

சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே...
சேல் என்பது கண்ணைக் குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்பக்கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

பொருள்:-

அரசனை மேல் (ஆசை) நம்பிக் கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான பொருள்:-

அரசினை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை மட்டும் சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

பொருள்:-

மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.

உண்மையான பொருள்:-

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதைப் போல ஆனாளாம். 

பொருள்:-

அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.

உண்மையான பொருள்:-

வர வர மாமியார், கயிதைப் போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயைக் குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும், நடப்பதும், நாளாக நாளாக கயிதைப் போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

பொருள்:-

ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான்.

உண்மையான பொருள்:-

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 
1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 
2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 
4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. 

இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்

Saturday, July 23, 2022

மரூஉ

*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨*

🚧 புதுக்கோட்டை - புதுகை

🚧 தஞ்சாவூர் - தஞ்சை

🚧திருச்சிராப்பள்ளி -  திருச்சி

🚧உதகமண்டலம் - உதகை

🚧கோயம்புத்தூர் - கோவை

🚧நாகப்பட்டினம் - நாகை

🚧புதுச்சேரி - புதுவை

🚧கும்பகோணம் - குடந்தை

🚧திருநெல்வேலி - நெல்லை

🚧மன்னார்குடி - மன்னை

🚧மயிலாப்பூர் - மயிலை

🚧சைதாப்பேட்டை - சைதை

*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*

Wednesday, July 20, 2022

*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*

*70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*

*சைவம்*

*1. சமயம் என்றால் என்ன?*
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

*2. சைவம் என்றால் என்ன?*
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

*3. சைவ சமயம் எப்போது தோன்றியது?*
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

*4. யார் சைவர்?*
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

*5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

*6. சமயக் குரவர்கள் யாவர்?*
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

*7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

*8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

*9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

*10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

*11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

*12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?*
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

*13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

*14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.*
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

*15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக*
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

*16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

*17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*
18,497 பாடல்கள்.

*18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795

*19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

*20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

*21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

*22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*
அறுபத்து மூவர்.

*23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

*24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*
பரஞ்சோதி முனிகள்

*25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

*26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

*27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

*28. சித்தாந்த அட்டகம் - விளக்குக*
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

*29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*
வாகீச முனிவர்

*30. வேதங்கள் - குறிப்பு தருக.*
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

*31. ஆகமங்கள் - குறிப்பு தருக.*
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

*32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

*33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*
முடிந்த முடிபு.

*34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே" 

*35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

*36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.*
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

*37. அளவை - குறிப்பு தருக.*
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

*38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

*39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

*40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

*41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

*42. மும்மூர்த்திகள் யாவர்?*
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள 

*43. இறைவனின் எண்குணங்கள் யாவை?*
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

*44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?*
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

*46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.*
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

*47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

*48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

*49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

*50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

*51. வினை என்றால் என்ன?*
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும். 

*52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

*54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

*55. மாயை - குறிப்பு தருக.*
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

*56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

*57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

*58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

*59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது. 

*60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக*
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

*61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

*62. தீக்கை என்றால் என்ன?*
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

*63. இருவினை ஒப்பு என்றால் என்ன?*
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

*64. மலபரிபாகம் என்றால் என்ன?*
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும். 

*65. சத்திநிபாதம் என்றால் என்ன?*
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

*66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

*67. முத்தி என்றால் என்ன?*
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

*68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

*69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.*
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

*70. தசகாரியம் என்றால் என்ன?*

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்

🙏 *திருச்சிற்றம்பலம்*🙏

Saturday, July 16, 2022

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள்

நாளை ஆடி தமிழ் மாதம் பிறக்கிறது... 17.07.2020 சிறப்பு பதிவு...

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

Wednesday, January 26, 2022

*எத்தனை ஆண்டு என்ன விழா*

📓📒📓📒📓 *இன்றைய நாள் பொது அறிவுத் தகவல்கள்.* 
📓📒📓📒📓📒


1 ஆண்டு – காகித விழா.
2 ஆண்டு – பருத்தி விழா.
3 ஆண்டு – தோல் விழா.
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா.
5 ஆண்டு – மர விழா.
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா.
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா.
8 ஆண்டு – வெண்கல விழா.
9 ஆண்டு – மண் கலச விழா.
10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா.
11 ஆண்டு – எஃகு விழா.
12 ஆண்டு – லினன் விழா.
13 ஆண்டு – பின்னல் விழா.
14 ஆண்டு – தந்த விழா.
15 ஆண்டு – படிக விழா.
20 ஆண்டு – பீங்கான் விழா.
25 ஆண்டு – வெள்ளி விழா.
30 ஆண்டு – முத்து விழா.
40 ஆண்டு – மாணிக்க விழா.
50 ஆண்டு – பொன் விழா.
60 ஆண்டு – வைர விழா.
75 ஆண்டு – பவள விழா.
80 ஆண்டு - அமுத விழா.
100 ஆண்டு – நூற்றாண்டு விழா.

Sunday, January 23, 2022

*காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?*

🌴🌴🌴



*காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?*



ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." 

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!". 

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது." 

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

ஆதார் கார்டு ஜெராக்ஸ்(Aadhaar Card Xerox)

*🌷🌷ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஒருமுக்கிய விஷயமுங்க!*


பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார்_கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.

_அதை தவிர்க்க ஆடிட்டர் சொல்லி கொடுத்த வழிமுறை இது..._

ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. 

அப்படி கொடுத்தால் அதை ஜெராக்ஸ் எடுத்தாலும் செல்லாது.

Submitted for thepurpose of......... எந்த காரணத்துக்காக கொடுக்கப்பட்டது என்பதையும் எழுதி கொடுத்து விடுங்கள். மேலும் Self Attested  கீழே நீங்கள் கையெழுத்து போடும் போது தேதியையும் குறிப்பிடுங்கள்.

ஏனெனில் Self Attested + Signature இருப்பதை ஒவ்வொரு முறையும் பேனாவால் தான் எழுத வேண்டும். அப்போது தான் அது செல்லும். இனி மேல் சிம் கார்டுக்கோ வேறு எதுக்குமோ ஐடிப்ரூஃப் தரும் போதும் இதே வழிமுறையை பின்பற்றுங்கள். 

உங்கள் பெயரில் நடக்கும் முறை கேடுகளை இதன் மூலம் தவிர்த்து விடலாம்.

*மற்றவர்களுடன்*
 *பகிர்ந்து* *கொள்ளுங்கள்.*



🌷🌷

Tuesday, January 18, 2022

*நாட்டு மருந்து*

*🌷🌷நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*

பகிர்வு - தகவல் உலா 

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

 நம் முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான மற்றும் இனிய இயற்கை மருந்தாகும்...

 நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்...




🌷🌷

‎Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/EPtNzptlZWoGYkAPBGdg7L

Sunday, January 16, 2022

*40 வயசுக்கு அப்புறம்*

*40 வயசுக்கு அப்புறம்*


_*40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்*_

_*(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).*_

_*50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.*_

_*(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).*_

_*60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.*_

_*(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).*_

_*70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம்  ஒண்ணு தான்*_

_*(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).*_

_*80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.*_

_*(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).*_

_*90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்*_

_*(ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).*_

_*100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்*_

_*(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).*_

_*அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..*_
_*என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.*_

_*மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...*_

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...