Sunday, January 28, 2018

முளை கட்டிய பயிர்கள்

இதை மட்டும் செய்து பாருங்க...! அப்புறம் சொல்வீங்க...
News Fast

முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்.எப்படிப்பட்ட.பிறகு பாருங்கள் நன்மை கிடைக்கிறது என்று....
முளை கட்டிய பயிரில் என்ன இருக்கு?
1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
2. அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.
3. நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், செரிமானம் மேம்படுகிறது.
4. புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
5. தானிய ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
6. உடலுக்குத் தேவையான என்ஸைம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது.
7. உடல் எடை குறைக்க உதவுகிறது.
8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்ச்சியை மேம் படுத்துகிறது.
முளை கட்டிய பயிரை எப்படிச் சாப்பிடணும்?
1. பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.
2. வேகவைத்துச் சாப்பிடக்கூடாது.
3. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.
4. முளைகட்டிய பச்சைப் பயறை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிஃபனாகச் சாப்பிடலாம்.
இவர்கள் சாப்பிட்டாலும் ரொம்ப நல்லது
1. சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
2. வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரைக் குணப்படுத்தும்.
ஒரு முறை முயற்சித்து பாருங்கள்...நன்மைகளை அனுபவியுங்கள்...

Saturday, January 27, 2018

#மீனாஷியும்_மூக்குத்தியும்


"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே".

மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது:

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப் பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷி!! தாயே!! மீனாக்ஷி!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!

சிந்திப்போம் காமாக்ஷியின் வைபவத்தைத் தொடர்ந்து!!

ஶ்ரீமாத்ரே நம:
வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:
காமாக்ஷ்யை நம:
லலிதாம்பிகாயை நம:

-- ஶ்ரீராமராகவன்

விஸ்வநாதன் பவுன்சாமி

Friday, January 26, 2018

*முத்தம்*

பால. ரமேஷ்.

தினம் ஒரு தகவல்.


*உதட்டில் முத்தம்…கன்னத்தில் முத்தம்! இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?*

முத்தம் என்பது நாம் ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் போது அதை வெளிப்படுத்தும் முறை என்று கூறலாம்.

இந்த முத்த பரிமாற்றத்தினால் சில நோய்கள் குணமாகிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் கன்னத்தில், நெற்றியில், உதட்டில் என்று இது போன்ற பல இடங்களில் கொடுக்கும் முத்தங்களுக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.

அதே போல முத்தங்களில் பல வகைகள் உள்ளது. எனவே முத்தங்களின் வகைகள் மற்றும் அதற்குறிய அர்த்தங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

உதட்டில் முத்தம்


ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்தால், நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தமாகும்.

கைகளில் முத்தம்

கைகளில் கொடுக்கும் முத்தத்திற்கு, அவர் உங்களை மிகவும் மதித்து, அளவுக்கு அதிகமான மரியாதை உங்கள் மீது வைத்துள்ளதாக அர்த்தமாகும்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாகும்.

மூக்கில் முத்தம்

ஒருவர் உங்கள் மூக்கின் மீது முத்தம் கொடுத்தால், அதற்கு நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாகும்.

கண்களை திறந்து கொடுப்பது

முத்தம் கொடுக்கும் போது, கண்களை திறந்து வைத்துக் கொண்டு கொடுத்தால், உங்களின் உணர்ச்சியை அவர் ரசிக்கிறார் என்று அர்த்தமாகும்.

கண்களை மூடி கொடுப்பது

கண்களை மூடிக் கொண்டு முத்தத்தை பரிமாரிக் கொள்ளும் இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம் கொடுத்தால், அதற்கு உங்களுடன் நல்ல நட்பு வைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன் என்று அர்த்தமாகும்.

கண்களில் முத்தம்

கண்களின் மீது முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாகும்.

கழுத்தில் முத்தம்

உங்கள் அருகில் நெருக்கமாக வந்து, கட்டி அணைத்து, கழுத்ததில் முத்தம் கொடுத்தால், நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாகும்.


MOON

#நிலா_விருந்து_மூன்று

#ரா_பிரபு

(Jan 31 : Super moon, blue moon, blood moon மூன்றும் ஒரே நேரத்தில் ....)

வரும் ஜனவரி 31 ஆம் தேதி நிலா நமக்கு ஒரே நேரத்தில் மூன்று விருந்து வைக்க உள்ளது.. அதாவது super moon , blue moon, blood moon இந்த மூன்று அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. கூடவே முழு சந்திர கிரகணம் எனும் நிகழ்வையும் சேர்த்து கொள்ள மறக்காதீர்கள்.

இந்த கலர் கலர் நிலாகள் ...இவைகள் என்ன என்பதை பார்ப்போமா ??

🌙 Super moon :

நிலா நம்மை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை நாம் அறிவோம். அப்படி சுற்றும் போது எப்போவாவது மிக மிக அருகில் வந்து போகும். அப்படி மிக அருகில் வரும் நிகழ்வுக்கு பெயர் சூப்பர் மூன். அன்றைக்கு நிலா வழக்கத்தை விட மிக பெரிதாக தெரியும் வழக்கமான வடிவத்தை விட 14 சதம் அதிகம் பெரிதாக 30 சதம் அதிக வெளிச்சமாக தெரியும்.

🌙 blue moon :

இது நீல நிறத்தில் எல்லாம் தெரியாது சும்மா பெயர் தான் ப்ளூ மூன்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முழு நிலவு தோன்றினால் அந்த நிகழ்வு தான் blue moon.

🌙 Blood moon : 

முழு சந்திர கிரகணத்தின் நடக்கும் ஒரு நிகழ்வு படி சூரிய கதிர்களில் உள்ள நீல நிறங்கள் வழியிலேயே சிதரடிக்க பட சிகப்பு நிறத்தை மட்டும் பிரதி பலிக்கும் ரத்த நிலா தான் blood moon

இப்படி பூமிக்கு மிக பக்கத்தில் சூப்பர் மூனாக வந்து ...கூடவே ப்ளூ மூணாகவும் வந்து... ரத்த நிறத்திலும் வரும் jan 31 ஆம் தேதி தெரிய போகும் முழு சந்திர கிரகணம் ஒரு மிக மிக அறிய நிகழ்வு...
கடந்த 150 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு அபூர்வ நிகழ்வு...
வெறும் கண்ணால் பார்க்க தடை இல்லை என்பதால் உங்கள் பகுதியில் தெரியும் பட்சத்தில் பார்த்து மகிழுங்கள்..

Monday, January 22, 2018

பித்ருபூஜை ஓர் #சிறப்புப்பார்வை

#மிகவும் #அவசியம்  #பதிவு.படிக்வும்

#அவசியம்   படிக்கவும்

மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் #நம் பித்ரு பூஜைகள் #எவ்விதம் #அவர்களைச் #சென்றடைகின்றன.

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது.

இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம்.

பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது.

அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது.

அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.

ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது.

தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.
மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.

அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர்.

இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர்.

சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை #இறைவனே #ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.

நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, #நம் #பித்ருக்கள் #நம்மை !#ஆசீர்வதிக்கும்போது, #அந்த ஆசி நம்மை #ஏராளமான #துன்பங்களிலிருந்து #காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் #பித்ருபூஜைகளின் #மகத்தான புண்ணிய #பலன் அளவற்றது என்பதையும், #எக்காரணத்தைக் #கொண்டும் பித்ரு #பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்
(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)

#ஸ்ரீராமஜயம்

Sunday, January 21, 2018

*கிருஷ்ணகிரி*

*கிருஷ்ணகிரி*ன்னா என்ன நினைத்தீர்கள்...??

உலகத்திற்கு *முதல் உயிரையும்*
*பண்பாட்டையும்* வழங்கிய ஊரு இது!

*அடங்க மறுத்த* ஊரு இது!

அன்னியனை *அரவணைத்த* ஊரு இது!

*வீரம்* அறுவடை செய்யும் ஊரு இது!

வெள்ளையனை *விரட்டி அடிச்ச* ஊரு இது!

*இராஜாஜி*யை கொடுத்த ஊரு இது!

*அன்பால்* உருவான ஊரு இது!

அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊரு இது!

*பாசத்தை* பங்கு வைச்ச ஊரு இது!

பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊரு இது!

*ஆட்டுகறிக்கு* அடித்து
கொள்வோம்!
*கோழிகறிக்கு* கூடிக்கொள்வோம்!

*மாணவர் இயக்கம்*
விதைத்த ஊரு இது.!

எமனே *எருமைமீது* வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!

நம்மவூரு *மாம்பழம்* தித்திக்கும்!

நம்மவூரு *ரோஜா பூ* கமகமக்கும்!

மீனுக்கு *"K.R.P"*

தாய்மாமன் *சீரு* தகதகக்கும்!

ஆடியில் விடும் *வண்ணவேடிக்கை*க்கு உலகமே கிடுகிடுக்கும்!

*மும்பைல* *மெட்ராஸ்காரன்னா* பயப்புடுவான்,
அந்த *மெட்ராஸ்காரன்லயே கிருஷ்ணகிரி * காரனா தெறிச்சு ஓடுவான்.

நானும் *கிருஷ்ணகிரி  காரன்* என்பதில் பெருமை படுகிறேன்.

தாகத்துக்கு *"பம்புசெட்டு"*

துனிவாங்கனுமா *"பருகூர்"*

தமிழுக்கு
*"போச்சம்பள்ளி "*

சந்தூரில் அனைத்து வகையான மாங்கன்றுகளும் கிடைக்கும். இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாஞ்செடி நர்சரிகள் உள்ளது.

பாவம் நீங்க *"ஆவல்நத்தம்*

காதல்செய்ய
*"மலைக்கோயில்"*

கல்லு க்கு
 *"வேப்பனஹள்ளி"*

மண் பானைக்கு *"குந்தாரப்பள்ளி*

வம்புக்கு *சூளகிரி*

தென்றலுக்கு *"காவேரிப்பட்டினம்*

பிரியாணிக்கு *முனியான்டி விலாஸ்*

அழகுக்கு *"தளி(Little England"*

பார்த்து ரசிக்க *"K தியேட்டர்"*

பைக்ரேஸ்சுக்கு *"பைபாஸ்"*

பறவைக்கு *கெலவரப்பள்ளி*

கல்லூரிக்கு
*பெருமாள்மனிமேகலை*

பள்ளிக்கூடம்னா
*"ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா"*

தொழிலுக்கு *"ஓசூர் நகரம் "*

குற்றத்திற்கு *ஊத்தங்கரை*

பயணம்னா *"கலைமகள்"*

பர்சேஸ்னா *"ஸ்ரீ பகவத் டிபார்ட்மெண்டல்"*

அன்பா பேசுனா *"கேன்டீன் டீ"*

வம்பா பேசுனா *"அருவா"*

இது தாம்லே எங்க *கிருஷ்ணகிரி ஜில்லா...!!*

*நீங்களும் கிருஷ்ணகிரி யா*

Saturday, January 20, 2018

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்



உங்களுக்கு தெரியுமா..?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.
இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.

Friday, January 19, 2018

TNPSC CCSE-IV

🌹TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம்  இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
👇👇👇👇👇👇👇👇
முழு தேர்வு 1
📤https://userupload.net/h3l88kaa28tm

 முழு தேர்வு 2
📤https://userupload.net/i5e5fut6d4ka

முழு தேர்வு 3
📤https://userupload.net/eb9n4qll97za

முழு தேர்வு 4
📤https://userupload.net/446549wgo7j1

🔗visit  our blog
tnpscnot.blogspot.com
download செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம் https://youtu.be/PiDp-kzgqVM

என்ன ஒரு கதை இது?

என்ன ஒரு கதை இது? எழுத்தின் ஆழம், அதன் வலிமை எத்தகையது என்பதை இந்தக் கதையைப் படிக்கும்போது உணர்ந்தேன். படித்துக் கொண்டு இருக்கும் போதே கண்ணீரை வரைவழைத்ததும் அல்லாமல், (இதைச் சொல்ல எனக்கு வெட்கம் இல்லை)  இப்போது ஏன் நான் வாய்விட்டே அழுகிறேன்? கோகிலம் மாமி போல் எனக்கு எப்போது அந்த மன உறுதி வரும் என்றா???? 😭😭

நீங்களும் முடிந்தால் படித்துப் பாருங்கோ 👇👇👇
இக்கதை எழுத்தாளர் யார் என்று தெரியவில்லை. வாட்ஸ் அப்பில் மதுரை நண்பர் ஒருவர் எனக்கு பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி 🙏🙏🙏🙏
.
#வெறும்_பணம்💲

இ(சி)ப்பிக்குள் மட்டுமல்ல அரிதாய் நத்தைக்குள்ளும் முத்து 💫இருக்கும்...

அதுபோல முகநூலில் நான் கண்ட முத்தான பதிவு...

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

`உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்

`கோகிலம்` என்றாள்

`கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.

`இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.
`எந்த ஊர்` எனக்கேட்டேன்.

`தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்

`எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `

`நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.
`வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்

`கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.

`அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்

`இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்

`நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.
நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.
கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்

வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.
அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்

`நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்

`நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `

`என்ன வேலை` என்று கேட்டேன்

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்

`சரி போயிட்டு வா `என்றேன்

`டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்

`அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`

`அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம் `

`அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்
`கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்

`அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை

மறுநாள் என் மனைவி சொன்னாள் `கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`
`யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்

`தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

`என்ன வேணும்` எனக்கேட்டேன்

`எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்

`உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்

`கோகிலம்` என்றான்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்
வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது

`இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்

`உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்

`நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்
`யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `

`அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்

`உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்
`ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்

`உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`

`நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `
எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

“எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்
அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே“

“வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`

“அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி
“நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்
மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது
அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு

இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.

அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை

என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.

உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்
உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்

“நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்...!!!

🙏

பிரியாவிடையுடன்
உங்களின்
நான்

Thursday, January 18, 2018

சடாரி

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்

வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி?. பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன. "இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்" என்று பதிலுக்கு வாதிட்டன.

கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட ,ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்.

இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்.

Tuesday, January 16, 2018

*தை அமாவாசையும் அபிராமிப் பட்டரும்*

தை அமாவாசைக்கும் அபிராமிப் பட்டரும் உள்ள தொடர்பை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.

திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார். பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார்.

அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார்.

அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார்.

அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.

யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அபிராமிபட்டர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் அம்பாள் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச்சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார்.

கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே அவர் எண்ணி வழிபடுவார். அர்ச்சனைக்காக கைகளில் கொண்டுவரும் மலர்களை அந்தப் பெண்கள் மேல் தூவி மகிழ்வார். அவரது ஞானக் கண்களுக்கு அந்தப் பெண்கள் அபிராமி அம்சமாகவே தோன்றினார்கள். ஆனால் மக்களோ அபிராமி பட்டரை தினம் தினம் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படிப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று கூட சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

அபிராமி பட்டரோ அதைக் காதில் வாங்கவில்லை. யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை. அபிராமியைத் துதிப்பதும், அவளைப் பற்றி துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறுவார். பிறகு அந்த திதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அபராமி பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.
இந்தப் பித்தனின் புகழை ஊரறிய, உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டாள் அன்னை அபிராமி!

அதற்கான நாளும் நெருங்கியது. ஒரு நாள் தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி (1675-1728) புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி பூம்புகார் சென்று கடலில் நீராடினார். பிறகு அவர் திருக்கடவூருக்கு அமிர்தகடேசுவரரையும் அபிராமியையும் தரிசனம் செய்ய வந்தார்.

மன்னனைக் கண்டதும் மக்கள் வரவேற்று உபசரித்து வணங்கினார்கள். ஆனால் அபிராமிபட்டர் மன்னர் வந்திருப்பது அறியாமல், மன்னரை வணங்காமல் தனக்குள் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருந்தார். மன்னர், இவர் யார் எனக் கேட்டார், சுற்றி இருந்தவர்கள் மன்னரிடம், மன்னா இவர் பெயர் அபிராமிபட்டர். தினமும் பைத்தியம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை கூட வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று புகார் கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் சரபோஜி மன்னர் அதைச் சோதிக்க எண்ணினார். புறநினைவு சற்றுமின்றி, தன்னுள்ளே அன்னையைக் கண்டு பரவச நிலையில் அமர்ந்திருந்த அபிராமி பட்டரிடம் நெருங்கி சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார்.

மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி மட்டுமே எண்ணி யோக நிலையிலேயே கோடி சூர்யப் பிரகாசமாய் அன்னையைத் தன் மணக்கண்ணில் கண்டுகளித்திருந்த அபிராமிபட்டர் சற்றும் தாமதிக்காமல், இன்று பவுர்ணமி திதி” என்றார். உண்மையில் அன்று அமாவாசை. அதை நினைத்தபடி சரயோஜி மன்னர் அப்படியென்றால் இன்று இரவு பவுர்ணமி நிலவு வருமா? என கேட்டார். அதற்கு அபிராமிபட்டர் நிச்சயம் வரும் என கண்மூடிய நிலையில் கூறினார்.

சரபோஜி மன்னருக்கு கோபம்பொத்துக்கொண்டு வந்தது. இன்று இரவு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை என்றார். இது அரசகட்டளை என்று கூறி விட்டு மன்னர் சென்றார். அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை எல்லாம் மற்றவர்கள் மூலம் கேட்டு உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் கவலைப்பட்டார்.

இந்த தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினார். பிறகு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். அதில் விறகை அடுக்கி தீமூட்டினார்.

அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்தார். பின்னர் அன்னையை நினைத்தப்படி அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

“உதிக்கின்ற செங்கதிர்” என்று ஆரம்பிக்கும் அந்தாதிப் பாடல்களை பாடத்தொடங்கினார். அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். காலை போனது; நண்பகல் சென்றது; மாலையும் வந்தது... பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கை சாயவில்லை! அமாவாசை என்பதால் வானம் இருண்டு உலகமே இருளில் மூழ்கி கிடந்தது.

ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று அபிராமி பட்டர் நம்பினார். 78 பாடல்கள் பாடி முடிந்தது. 78 கயிறும் அறுபட்டு விட்டது. மிகுதியாக இருந்த கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது பாடிக்கொண்டே இருந்தார்.

அபிராமிபட்டர் 79 வது பாடலாக அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், ”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு” என்ற பாடலைப் பாடினார். அதை பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.

தன் காதில் அணிந்திருந்த கம்மலை அன்னை அபிராமி கழற்றி எடுத்து வானவீதியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடியது போல் ஒளியைப் பொழிந்தது. அவள் அபராமிபட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.
அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மகிழ்ந்தார். அபிராமிபட்டரைப் பற்றி பித்தன் என்று கூறியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டனர்.

சரபோஜி மன்னர் அபிராமிபட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அதற்கான பட்டயம் இன்றும் அபிராமி பட்டரின் வாரிசுகளிடம் உள்ளது.

100 விதமான பலன்கள் :

அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் சொல்கிறார்கள். உதாரணமாக உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கடந்தும் எனத் தொடங்கும் 10-ஆம் பாடல் மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி எனத்தொடங்கும் 15-ஆம் பாடல் பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறவும் உதவும் எனக்கூறப்படுகிறது. இப்படியே 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...