Saturday, December 30, 2017

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:




வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF
மின்நூல்கள்:
தந்தை பெரியார்
https://t.co/q2VexzfDTP
கார்ல் மார்க்ஸ்
https://t.co/BbQwjgJFcq
சேகுவேரா
https://t.co/JI9eSrEDUE
தாமஸ் ஆல்வா எடிசன்
https://t.co/a6InSC0Da1
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
https://t.co/IWWUTSWna5
பிரபாகரன்
https://t.co/Zg5mtFiFE8
மாவீரன் அலெக்சாண்டர்
https://t.co/A2abcypbAv
மருதநாயகம்
https://t.co/gpeSWfN4R6
ராமானுஜம்
https://t.co/HgR7VZeYGI
சுனிதா வில்லியம்ஸ்
https://t.co/jkSAD1kMEL
ஹெலன் கெல்லர்
https://t.co/Jjw8SYd5XH
அறிஞர் அண்ணா
https://t.co/hanYh3Y2cS
திப்பு சுல்தான்
https://t.co/hMPzLcS68j
நெப்போலியன்
https://t.co/2CeBxGohU3
கேனல் கடாபி
https://t.co/W6aukGy6rs
ஹிட்லர்
https://t.co/qHpoaN6Z0A
காமராசர்
https://t.co/Y7A7LCmo1o
பாரதியார்
https://t.co/lVAC1Skenq
பிடல் காஸ்ட்ரோ
https://t.co/2fAuV7G33K

சுறுசுறுப்பு

குட்டி கதை🌷

பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகெடுத்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகிவிடும்.

அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.

மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !

இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !

ஆயினும், அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !

யோசித்த மீனவர்கள்  புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.

குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.

வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கை சுவைக்க தேமேயென்று கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !

சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்!

Friday, December 29, 2017

இந்துமதம் (Hindu)

*ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்*

🌻👉🏽 அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது.

🌏🔥 ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்

 *நான்கு வகை உயிரினங்கள் :*

1. சுவேதஜம்

– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம்

– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம்

– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம்

– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

 *ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :*

1. கர்ணன்  (Karnan)
2. காளந்தி (Kalandhi)
3. சுக்ரீவன் (Sukriva)
4. தத்திய மகன் (Son of Thathiya)
5. சனி (Sani)
6. நாதன் (Nathan)
7. மனு (Manu)

 *நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :*

1. சனகர் (Sanagar)
2. சனாதனர் (Sanadhanar)
3. சனந்தகர்  (Sanandhagar)
4. சனத்குமாரர் (Sanathkumarar)
5. வியாக்கிரபாதர்  (Viyakkirabhadhar)
6. பதஞ்சலி (Padhanjali)
7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)

8. திருமூலர் (Thirumoolar)

 *அஷ்ட பர்வதங்கள் :*

1. கயிலை (Kailai)
2. இமயம் (Himalaya)
3. ஏமகூடம் (Eamakoodam)
4. கந்தமாதனம் (Kandhamaadhanam)
5. நீலகிரி (Neelagiri)
6. நிமிடதம்  (Nimidadham)
7. மந்தரம் (Mantharam)
8. விந்தியமலை (Vindhaya Mount)

 *ஆத்ம குணங்கள் :*

1. கருணை (Mercy)
2. பொறுமை (Patience)
3. பேராசையின்மை (without Greed)
4. பொறாமையின்மை (without Jealousy)
5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
6. உலோபத்தன்மையின்மை  (Ulobathanmaiyinmai)
7. மனமகிழ்வு (Pleasure)

8. தூய்மை (Purity)

 *எண்வகை மங்கலங்கள் :*

1. கண்ணாடி (Mirror)
2. கொடி (Flag)
3. சாமரம் (Samaram)
4. நிறைகுடம் (Full pot)
5. விளக்கு (Lamp)
6. முரசு (Drum)
7. ராஜசின்னம் (The royal symbol)
8. இணைக்கயல் (

 *எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்* :

1. சந்தனம் (Sandal)
2. கோட்டம்
3. கஸ்தூரி (Musk)
4. கற்பூரம் (Camphor)
5. குங்குமம் (Vermilion)
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர் (Rhizome root)

 *ஏழுவகைப் பிறப்புக்கள் :*

1. தேவர் (Deity)
2. மனிதர் (Human)
3. விலங்குகள்  (Animals)
4. பறப்பவை (Birds)
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம் (Plants)

 *ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:*

1. பூமி (Earth)
2. புவர்லோகம்
3. தபோலோகம்
4. சத்யலோகம்
5. ஜனோலோகம்
6. மஹர்லோகம்
7. சுவர்க்கலோகம்

 *ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :*

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4. இரசாதலம்
5. தவாதலம்
6. மகாதலம்
7.பாதாலம்.

 *குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :*

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

 *அஷ்ட ஐஸ்வர்யங்கள் :*

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

 *எண்வகை போகங்கள் :*

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

 *நவ நாகங்கள் :*

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3.அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

 *நன்மை தரக்கூடிய தச தானங்கள் :*

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8.சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்

🌻👉🏽 நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .

🌻👉🏽 கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்ற தை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு. கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்.

மூளையின் கூர்மையும், நலமும், வளமும்

*மூளையின் கூர்மை, சுறுசுறுப்பு, நினைவாற்றலுக்கு செய்ய வேண்டியவை!*


மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.

*1. தினமும் ஒருவாழைப்பழம் :*

காரணம், இதிலுள்ள “ட்ரிப்டோபன்’’, “டைரோசின்’’ என்ற அமினோ அமிலங்கள் மற்றும் “செரோடோனின்’’, “டோபமைன்’’ போன்ற இரசாயன சத்துக்கள்தான்.

கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை உதவுகின்றன.
வாழைப்பழத்தில் நிறைய உள்ள ‘சி’ வைட்டமின் மூளைக்குத் தேவையான ``நார் எபினெரின்’’ உருவாக்க உதவுகிறது. மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.

*2. பப்பாளி :*

மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள ‘சி’ வைட்டமின் உதவுகிறது, மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது. பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.

*3. கருப்பட்டி வெல்லம் :*

பனஞ்சாற்றி-லிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது. இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும்.

*4. சிவப்பரிசி :*

இதிலுள்ள “வைட்டமின் பி’’ மூளைச் செயல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நயசின், தையமின், ஐனோசிடால் போன்ற ‘பி’ வைட்டமின்கள், ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், செரட்டோனாக மாற்றப்பட உதவுகின்றன.
இது மன அமைதிக்கும், நினைவாற்றலுக்கும், மன நிறைவிற்கும் உதவுவதோடு, நல்ல உறக்கம் வரவும் உதவுகிறது. மன அழுத்தம் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

*5. மீன் :*

புரதச் சத்து அதிகம் உள்ள மீனில் ‘டைரோசின்’ என்ற அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதன் உதவியால் மூளைச் செல்கள் டோபமைன் என்னும், நியூரோடிரான் ஸ்மிட்டரை உருவாக்கு-கின்றன. இது சுறுசுறுப்பு, வேலைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட இவை உதவுகின்றன.

6. முட்டை :*

மஞ்சள் கருவில் உள்ள கோலின், நியூரோடிரான்ஸ்மிட்டரைத் தயாரிக்க உதவுவதால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். கவனமாகவும், ஊன்றி உள்வாங்கவும் உதவுவதோடு, கவனச் சிதறலையும் தடுக்கிறது.
மூளை நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள செல்களுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மஞ்சள் கருவில் உள்ளது. முட்டையில் உள்ள  ஞிபிகி என்னும் ‘ஒமேகா- 3’ என்னும் கொழுப்பு அமிலம் நரம்புச் செல்களின் இணைப்பிற்கு உதவுகிறது.

*7. கீரைகள் :*

கீரைகளில் ஞிபிகி அமிலம் உள்ளது. வல்லாரைக்-கீரை நினைவாற்றலை தர அதிலுள்ள `ப்ரம்மிக் அமிலம்’ உதவுகிறது. இது குழந்தைகளின் மூளைக்கு டானிக் போன்றது. கீரைகள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது. பசலைக்கீரை மூளைக்கு பெரிதும் நலம் சேர்க்கும். மலிவானவை என்பதால் கீரைகள் ஏழைகள் கூட அதிகம் உண்ண ஏற்றவை.

*8. வேர்க்கடலை :*

மூளைக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது, உகந்தது. பாதாம், வால்நட் போன்ற விலை கூடுதலான பருப்பு-களைவிட இதுதான் சிறந்தது. இதில் வைட்டமின் ‘ஈ’ அதிகம். ஆக்சிஜன் எற்றத்திற்கு இது பெரிதும் பயன்படும். நரம்பு மண்டலத்தைப் பலப்-படுத்தவும். வேர்க்கடலை உதவுகிறது. இதிலுள்ள ‘தைமின்’ என்னும் அமினோ அமிலம் மூளை நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் புரதம் நிறைய உள்ளது.

*9. எள் :*

இதிலுள்ள `செலினியம்’ என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எள்ளில் உள்ள `ஜிங்க்’ என்னும் தாதுப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மூளை நலன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியமையாதது.

*10. உறக்கம் :*

ஒரு நாளைக்கு ஏழு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவையாகும். இது மூளையின் நலத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெரிதும் பயன்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாமல் வேலைகளை மாற்றி மாற்றி செய்தால் மூளை சோர்வடையாமல், சுறுசுறுப்படையும்.

Tuesday, December 26, 2017

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!




ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார்.

அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.

''அப்படியே ஆகட்டும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும்.  சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.
வைகுண்டஏகாதசி  விரதம்

Sunday, December 24, 2017

*2G_SPECTRUM*

*இவ்வளவுதான் 2ஜி*

தம்பி பிரபு

*2G_SPECTRUM*
அப்டின்னா என்னன்னு உங்களுக்கு
தெரியுமா.? தெரியாதா.?
எனக்குத் தெரிஞ்சத நான்
சொல்லுறேன். கேளுங்க ப்ளீஸ்.
ஆ.இராசா அமைச்சராக இருந்தபோது 2G அலைக்கற்றை (spectrum) 52.7
MHz(mega hertz) அளவுக்கு
விற்கப்பட்டது. ஒரு MHz -ரூ.267.5 கோடிக்கு விற்பனை ஆனது.
ஆக! 52.7MHz x 267.5 கோடி=
ரூ.14.98 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆனது.
அப்போது தலைமை தணிக்கையாளர்
(CAG) வினோத் ராய் தனது அறிக்கை மூலம் ஒரு கேள்வி எழுப்பினார். ஒரு MHzஐ ரூ.3350 கோடிக்கு
விற்றிருந்தால் (52.7xரூ.3350 கோடி) 1.76 லட்சம் கோடி அரசு வருமானம் ஈட்டியிருக்குமே என்றார்.
அதாவது 176545 கோடி.
குத்துமதிப்பாக 170000 கோடி
ஏன் குறைச்சு வித்தீங்க என்றார்.
ஆக! வருமானத்தில் இழப்பை
ஏற்படித்தியதுதான் வழக்கு. அந்த 170000 கோடி என்பது பணமாக ஆ.இராசா வீட்டிலோ, திமுக அலுவலகத்திலோ எங்கும் எடுக்கப்படவில்லை. இதுவரை அந்த தொகையின் எந்த பகுதியும் எங்கும்
இல்லை. ஆவணமும் இல்லை.
உதாரணத்திற்கு ப்ளாட்பார கடை இட்லி ரூ.5/-.
 சரவணபவன் இட்லி ரூ.32/-.
 ப்ளாட்பார ஆயா ஏன் ஒரு
இட்லி ரூ.32க்கு விக்கக்கூடாது
என்பதே வினோத்ராயின் கேள்வி. சாமான்யனுக்கு ப்ளாட்பார விலைதான் முடியும் என்பது அரசு கொள்கை.

இப்போது புரிந்ததா 2G இழப்பு
வழக்கு பற்றி. உத்தேச இழப்பு என்று சொல்கிறார்கள் சில தற்குறிகள். இதை படித்தும்
தேவையில்லாமல் இதைஊழல்
என மறுதலிப்பார்கள்
அவங்க இருக்கட்டும்.
மத்தவங்க தெரிஞ்சுக்குங்க.

*ராஜா_ஜி*

2-G விவகாரத்தில் CAG அறிக்கையில் எந்த இடத்திலும் ஊழல் என்று குறிப்பிடப்படவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் ஊகத்தின் அடிப்படையிலான (presumptive loss) இழப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். ஊடகங்கள்தான் திரும்ப திரும்ப அதை பெரிது செய்து 1.76 லட்சம் கோடி என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆடிட்டர் வினோத் ராய் கணக்குப்படி 1 MHzக்கு 3350 கோடி. 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால் கிடைத்தது வெறும் 12,386 கோடிகள் என்பதுதான் CAG அறிக்கையின் உள்ளடக்கம். ஆ.ராசாவிடமிருந்து இதுவரை எந்த கருப்புப்பணமோ அல்லது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தோ சொத்தோ பறிமுதல் செய்யப்படவில்லை. சொல்லப்போனால் அவர் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்காமல் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்தரப்பு வாதங்களை முன்வைக்கிறார்.

மெளனம் சம்மதம் என்ற திரைப்படம். அதில் ஒரு கொலையை எப்படி பத்திரிகைகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் திரித்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மேல் இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் என்று காட்டுவார்கள். ஊழல் என்றால் அது இப்போது அமித்ஷா செய்திருப்பதுதான். டீமானிட்டைசேஷன்  வந்தபோதே அமித்ஷா ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான கருப்புப்பணம் மாற்றப்பட்டது. இப்போது அவர் மகன். நஷ்டமடந்தை ஒரு டுபாக்கூர் நிறுவனத்தின் (வருமானவரி பாக்கியை வேறு அரசிடமிருந்து பெற்றுள்ளார்கள்) ஆண்டு வருமானத்தை பதினாறாயிரம் மடங்கு பெருக்கி பிறகு அந்த நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி மூடுவது ஊழலில் வராதா? இல்லை மணி லாண்டரிங் ஊழலை விட புனிதமானதா?

ஊழல் வேறு வருமான இழப்பு வேறு. பிரதமர் ஊழல் செய்யவில்லை என்பது உண்மைதான். அந்த பதவியில் இருந்துக்கொண்டு ஊழல் செய்யமாட்டார்கள் என்று நம்புவோம். ஆனால் இப்போது டீமானிட்டைசேஷன் ஜிஎஸ்டி மூலம் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடியின் நடவடிக்கையை எந்த CAG அமைப்பு தணிக்கை செய்யும்? ஜிஎஸ்டியால் எங்களுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம் என்று டாட்டாவின் டைட்டன் நிறுவனம் சொல்கிறது. அப்படி என்றால் இந்தியா முழுக்க எத்தனை லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்? இது வருவாய் இழப்பில் வந்தால் ஆ.ராசாவையும், மோடியையும் இந்த நடுநிலை நக்கி ஊடகங்கள் ஒரே தட்டில் வைத்து பேசுவார்களா?

2 g-யும் அம்மா உணவகமும் ;
சென்னையில் 100 அம்மா உணவகங்கள் உண்டு - இப்போது அம்மா இட்லியைப் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு கடையிலும் 500 இட்லிகள் தலா ஒரு ரூபாய் வீதம் தரப்படுகிறது என்றால்....
சாதாரண ஹோட்டலில் 6 ரூபாயாகவும், ஆரிய பவன்களில் 20 ரூபாயாகவும் உள்ளது.
நாம் 10 ரூபாய் கணக்கில் வைத்தால் கூட தினமும் 4500 ரூபாய் இழப்பு.
வாரத்திற்கு 6 நாட்கள் விற்பனை என்றால் 27,000 இழப்பு, மாதத்திற்கு 1,08,000 இழப்பு.
5 வருடங்களில் 5,40,000 இழப்பு.

இது ஒரு கடையில் மட்டுமே கணக்கு, 100 கடைகள் என்றால் 5,40,00,000 ஐந்து கோடியே நாற்பது லட்சம்.
ஒவ்வொரு கடையிலும் 10 ஐட்டங்கள் உண்டு என்று கணக்கிட்டால்.
அம்மா உணவகங்கள் 100 >< 4,50,000 தின இழப்பு என்றால்.
10 ஐட்டங்களுக்கு 45 லட்சம் தினமும் இழப்பு.
24 நாட்கள் அல்லது மாதத்திற்கு 10,00,00,000 அதாவது பத்து கோடி இழப்பு. இதை 12 ஆல் பெருக்கி வருடத்துக்கும்.
அதை ஐந்தா பெருக்கி 5 வருடத்துக்கும் என்று கணக்கு போட்டால் 600 கோடிகள் வருகிறதே.

இந்த 600 கோடி இழப்பா ஊழலா?
விலைக் குறைப்பு மக்களுக்கு சேவையாகத்தானே வந்துள்ளது?
இதில் எங்கே ஊழல் இருக்குது?
அதுதான் 2G ;
ராஜா பதவி ஏற்றபோது நிமிடத்துக்கு ஒரு ரூபாய்.
அது 60 பைசா ஆகி,
49 பைசாவாகி,
30 பைசாவாகி,
10 பைசாவில் முடிந்ததே!
நாம்தானே அனுபவித்தோம்.

- ராஜா ஜி


Saturday, December 23, 2017

"NEW HEALTH INSURANCE ID CARD "

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

*பதினாறு வகையான அர்தங்கள்*


-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

🙏🏿☘சிவ சித்தாந்தம்☘🙏🏿





🌿சுவாமி எதிரே_நிற்காதீர்!🌿

கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது

* வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது

* சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது

* பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது

* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது

* கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது

* நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது

* தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும்

* ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது

* மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது

* கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது

* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது

* பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது

* கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது

* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது

* அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்

* தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது

* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது

* சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது

* கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும்

* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்

* கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும்

ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்) —

‌கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது
* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்

தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.
  குட்டு என்றால் என்ன?                                                                          
விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்





🙏🏿☘சிவ சித்தாந்தம்☘🙏🏿

Sunday, December 17, 2017

ஓய்வூதியர் தினம்

இன்று 17 .12 .2017 ஓய்வூதியர்கள் உரிமைகள் பெற்ற நாள்
17 .12 1982 அன்று டி எஸ் நகரா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் y v சந்திரசூடு ,, v d . டுல்ஸாபுற்கெர்,,D .A தேசாய் ,,ஓ .சின்னப்ப ரெட்டி ,,இஸ்லாம் பஹாருல் ஆகிய நீதிபதிகள் வழங்கிய அற்புதமான தீர்ப்பு .

வணங்குகிறோம் அந்த நீதி அரசர்களை .
ஓய்வூதியர்கள் வாழ்வில் வசந்தத்தை அளித்த இந்த தீர்ப்பை போற்றும் வகையில் இந்த நாளை ஓய்வூதியர் தினமாக அனுசரிப்போம் .
புதிய ஓய்வூதிய திட்டம் என்ற அரக்கனை அழிக்க , நம்மை போன்று எதிர்காலங்களில் அவர்களும் பென்ஷன் பெற இந்தநாளில் சபதம் ஏற்போம்
பங்கு பெறுவோம் . உரிமைகளை பாதுகாப்போம் .

கொண்டாடுவோம் 17 டிசம்பர் ஓய்வூதியர் தினத்தை.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

*எல்லாம் நன்மைக்கே*

💐படித்ததில் ரசித்தது💐

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைசிந்தனை செய்துவிட்டு செய்வதும்  ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.

அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே
தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும்.

கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை
உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது.

காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும்  கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.
பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி  என்றது .

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது.

உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.

பக்தியுள்ள அணில் சொன்னது கடவுளை நம்புற நாங்கள் எல்லாம் துன்பப் படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

அதனால கடவுள் எங்கள கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும்  என்றது.ஆமாம் .கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை  மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது.

கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே  இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னித்திடு என்றது.அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்
தது.உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .

சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம் .

நமக்கு எது நிகழ்ந்தாலும் *இறைவன்* அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை என்றும்
இன்பமே..*

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை"

*மிகச் சிறந்த பதிவு*
*கட்டாயம்படியுங்கள்*

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை குருவி அப்படியொரு
அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.

வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால்
போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது
ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன?
அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.
தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக
நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும்
சரி என்றது.
குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
குறிப்பிட்ட இடத்துக்கு மேல்
அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.
பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.
உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.
இன்னொரு சிறகுதானே,
தந்தால் போச்சு என்று
குருவியும் சம்மதித்தது.
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி,
அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்
வழி சொன்னவர்களுக்கெல்லாம்
ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக,
அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.

ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே.
கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்
அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக
இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது
நரை கூடி, திரை வந்து
உடலும் மனசும் தளர்ந்து போகிறது.
எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
🤔👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

செல்போன் ஏன் செவ்வக வடிவில் உள்ளது?


நாம் தினமும் அதிகமாக உபயோகப்படுத்தும் செல்போன் ஏன் செவ்வக வடிவில் உள்ளது. இதை யாரவது சிந்தித்து பார்த்த்துள்ளீர்களா?

முதன் முதலில் செல்போன் தயாரிக்கப்படும் கீபேட், திரை, மைக் மற்றும் ஸ்பீக்கர் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்க கூடியதாக செவ்வக வடிவம் மட்டுமே சரியாக இருந்துள்ளது.

இது சாதாரண காரணம் தான்.

இதற்கு தொழில்நுட்ப காரணம் ஒன்று உள்ளது. நம் பார்வை என்பது 16:9 என்ற விகிதத்தில் சமமாக பார்க்க கூடியது.

எனவே செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.

இது மட்டுமல்லாது, பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும்.

இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது.

மேலும், செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது என்ற கணித விதிமுறைகளும் உள்ளது

*பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

மன்னிக்கவும்*
🔎 *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே* 🔍
இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.
அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*
இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
✍நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.
ஏனெனில்,
*நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
🔎👀🔍படித்ததில் பிடித்தது ✅

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...