Wednesday, June 27, 2018

*வாழ்க்கையில் வெற்றி*

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா? என்பதை எப்படி கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை:

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
அதுல பதிலை எழுதுங்க.

ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.

ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.

உங்களால முடியலேன்னா
அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.

அதுவும் முடியலியா….

படிச்சிகிட்டே போங்க….

ரெடியா.....

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிடுகின்றன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1) உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
பணக்காரர்களோ,
புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
வெற்றியோ நிலையானதல்ல.

பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.

உங்கள் மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
அவர்கள் ஒருவராவது
விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.

கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.

முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

கடவுள் தானா தன் மனசுல உங்களுக்கு இடம் கொடுப்பார்......

Friday, June 22, 2018

*கிருஷ்ணகிரி வரலாறு*

கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர்ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன்தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரிவழியாக காவேரிப்பட்டினத்திற்குசென்று அங்கு ஹைதர் அலியின்படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள்படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.

" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரிமாறியது.

மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்.கிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது.2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

Friday, June 15, 2018

*மூன்றாம் பிறை தரிசனம்*

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.  சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்க ளைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதெ ன்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொ ண்டுள்ளன.அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வ ங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.
மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
     *திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

*பிறை பார்க்கும் பயன்*

#மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

#நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

#ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

#ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

#ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

#பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

#நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்  ( முத்திப்பேறு )

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

அதற்கான முறைகளையும் காண்க:

ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும், என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்,திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

வாழ்க வளமுடன் !

🌙திருச்சிற்றம்பலம்🌙* சிவாயநம *

Saturday, June 9, 2018

*அமைதி*

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது.

அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

இந்த ஓவியத்தை வரைந்தது யார்?

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை…

கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…

ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?.

மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...,

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்…
அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும், என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

*சாத்தியமில்லாத_இடத்தில்_சாத்தியப்படுவது_தான்_அமைதி...*

*இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல*

அருமையான பதிவு👌🏽

மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.

'அப்படியா... ஏண்டி?'

'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.

*மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்*.

வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.

'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, *பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்*... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; *நான் தனியா உட்கார்ந்திருக்கணும்*. உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
*இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர,* *பதில் என்னமோ மறுப்பு தான்*; பதில் என்னவோ அலுப்பு தான்.

முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்...

'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'

*எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும்*, *ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!*

பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற *வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்*; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.

'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.

அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.

*'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்*; *நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க.*..' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?

தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.

இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.

எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. *இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல*; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.

*'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா*...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.

Most valuable lesson for parents and children

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...