Sunday, August 26, 2018

*மகன்*

👉 ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்.

👉 மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான்.

அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கி வந்து தாயிடம் கொடுத்தான்.

அதற்கு அவனுடைய தாய்,

*“இத்தனை நாளும் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி, எல்லாச் செலவையும் செய்த உன் தந்தையிடம் போய் சம்பளத்தைக் கொடு”* என்றாள்.

👉 அதற்கு அவனோ முடியாது என்று மறுத்து விட்டான்.

👉 தாயானவள் மீண்டும் அவனிடம் பணத்தை தந்தையிடம் கொடு என்று சொல்லியும் அவன் கேட்காததால், அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அடி விட்டாள்.

*“பணத்தை அப்பாவிடம் போய்க்கொடு, என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்”* என்றாள் தாய்.

அதற்கு அவன்,

*“அம்மா! ஒவ்வொரு முறையும் தந்தையிடம் நான் பணம் வாங்கும்போதும் அவருடைய கை மேலே இருக்கும், என்னுடைய கை கீழே இருக்கும்.*

*ஆனால் இப்போது நான் அவரிடம் சம்பளப் பணத்தைக் கொடுக்கும் போது அவருடைய கை கீழேயும், என்னுடைய கை மேலேயும் அல்லவா இருக்கும். அதனால்தான் இப்படி நடந்து கொண்டேன்”* என்றான்.

இதை உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அவனது தந்தை ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.

*மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்து கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.*

- படித்து கண் கலங்கியது.

*மன அமைதி*

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.

ஏரி கலங்கி விட்டது. கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீர் முகராமல் திரும்பிவந்து தன் குருவிடம் விசயத்தை தெரிவித்தார்.

பின் சிறிதுநேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையில் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய்.
அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்.

அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே!

Tuesday, August 21, 2018

*‘’காலத்தைப் பயன்படுத்துங்கள்..’’*

⏰இன்றைய சிந்தனை..( 18.08.2018..)..
.............................................

‘’காலத்தைப் பயன்படுத்துங்கள்..’’
.............................................

"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே.

காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொது..

கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.

உங்கள் நேரம் உங்களுக்காகவே.அதை மற்றவர்க்காக இழக்காதீா்கள்.உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்..

எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல.

வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள்
சீக்கிரமே நின்று போகுமா? அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமா? என்பதை யாரும் கூற இயலாது.

தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்.
அன்பு செலுத்துங்கள்.உழைத்து கொண்டிருங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காாியத்தையும் திட்டமிடுங்கள்.ஒரு குறிப்பிட்ட வேலையைஇவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும்.கால விரயத்தைத் தடுக்கலாம்.

ஆம்.,நண்பர்களே..,

காலத்தைச் சாியாகப் பயன்படுத்த தொிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டு இருக்கிறீா்கள் என்று நம்பலாம்.🌷🙏🏻💐

*மன அமைதி*

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.

ஏரி கலங்கி விட்டது. கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீர் முகராமல் திரும்பிவந்து தன் குருவிடம் விசயத்தை தெரிவித்தார்.

பின் சிறிதுநேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையில் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய்.
அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்.

அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே!

*மௌனம்_ஒரு_மகாசக்தி*

*ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.*

*அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.*

*நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.*

*ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.*

*நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.*

*எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.*

*பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.*

*ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.*

*மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*  

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*  

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே*

*#வாழ்க_வளமுடன்*

Monday, August 20, 2018

*சாபங்கள்-13*

*சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!*

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
😎 கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

*1) பெண் சாபம் 😗

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

*2) பிரேத சாபம்*😗

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

*3) பிரம்ம சாபம்:*

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

*4) சர்ப்ப சாபம்:*

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

*5) பித்ரு சாபம்:*

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

*6) கோ சாபம்:*

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

*7) பூமி சாபம்:*

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

*8) கங்கா சாபம்:*

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

*9) விருட்ச சாபம்:*

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

*10) தேவ சாபம்:*

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

*11) ரிஷி சாபம்:*

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

*12) முனி சாபம்:*

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

*13) குலதெய்வ சாபம்*,😗

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.Wonderful analysis 👇
~~~~~~~~~~~~~~~

" ஏற்றமும் , இறக்கமும் உள்ளது வாழ்க்கை என உணர்த்தியது "...
👉 *பரமபதம்* 👈

" எண்ணிக்கையில் கூட்டலையும் , பெருக்கலையும் விளையாட்டாய் கற்றுக் கொடுத்தது "...
👉 *கிட்டிபுள்* 👈

" வெட்டி வெளியில் எறிந்தாலும் , மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிக் கொடுத்தது "...
👉 *தாயம்* 👈

" அடுக்கியது சரித்து , மீண்டும் அடுக்கி அழித்தலும் , ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது "...
👉 *ஏழுகல்* 👈

" வேறு வழியில்லை என்ற நிலை வரும்வரை போராடு என பொட்டில் செதுக்கியது "...
👉 *சதுரங்கம்* 👈

" ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும் , ஒளிந்து தனிமை நேரப் பெருமையையும் பெற்றுத் தந்தது "...
👉 *கண்ணாமூச்சி* 👈

" அடுத்தவர்க்கு சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என நெறி ஊட்டியது "...
👉 *நொண்டி* 👈

" இருக்குமிடத்தில் எடுத்து , இல்லாவிடத்தில் நிரப்பும் குணம் , மனம் பதித்தது "...
👉 *பல்லாங்குழி* 👈

" நண்பன் உயரம் போக முதுகும் , தோளும் கொடுத்து குனிந்து , பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது " ...
👉 *பச்சைகுதிரை* 👈

அதனால் தானோ என்னவோ அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...

படித்ததில் பிடித்தது 👍👍👍

*கோபத்தை கட்டுப்படுத்த*

🍅- *'குப்பை வண்டி விதி’*
  (The Law of the Garbage Truck).

🌷ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

🌷இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட…

🌷ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

🌷அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.

🌷இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

🌷அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“

🌷ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

🌷அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் *‘குப்பை வண்டி விதி*’ எனப்படுவது. ஆங்கிலத்தில் *‘The Law of the Garbage Truck’* என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார்,

🌷 *பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.*

🌷மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

🌷அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”

🌷அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

🌷வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்.

🌷அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

🌷 *நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்*

*அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம்.*

🌷 *வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.*

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...