🌺🙏🌺
🌺பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் நல்ல மனது இருந்தால் மட்டும் போதும் அதற்க்கு ஒரு சிறு விளக்கம் உண்டு
🌺ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்.
🌺முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள்
அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார்
🌺இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார்.
அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர்.
🌺ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார்.
அவர் ஏதும் புரியாமல், ஆமாம் சுவாமி என்றார்.
🌺கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.
🌺பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல், ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார்.
🌺கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது.
🌺உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?' என்றார்
🌺ரமணரிடம், முடியாது சுவாமி, என்றார் பக்தர்.
அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான்.
அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது.
🌺தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும்.
🌺உன்னை இறைவனடியில் சேர்க்கும்.
அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.
🌺ஆகையால் நமக்கு தெரிந்த அளவில் உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான இறைவழிபாடு... 🌺🙏🌺
No comments:
Post a Comment