எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகிறதா?
வீண் செலவுகளை எப்படி கட்டுப்படுத்தலாம் ?

👉 இளம் வயதினரிடையே இருக்கும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் 'பேஷன்" என்றோ 'டிரன்ட்" என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.
👉 செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை எல்லாருமே ஒப்புக்கொள்வர். ஆனால், எந்த செலவுகளை கட்டுப்படுத்துவது என்பது தான் பலருக்கும் தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சம்பாதிப்பதை, நம் வாழ்வில் செலவு செய்வது என்பது முக்கியம் தான். ஆனால், வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கான சில வழிகள்..
👉 ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன் கூட்டியே திட்டமிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கச்சிதமாக நிறுத்துங்கள்.
👉 பொதுவாக உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களில் செலவு செய்யலாம். ஆனால், அந்த செலவுகளும் உங்களுக்கு முக்கியமானவையாக இருக்க வேண்டும்.
👉 உங்களை எது மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்பதை மற்றவர்களால் தீர்மானிக்க முடியாது. நீங்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும். முக்கியமில்லாத செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கேற்ப செலவுகளை செய்ய வேண்டும்.
👉 எந்த செலவையும் மேற்கொள்ளும் முன், அதற்கு தேவைப்படும் தொகை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். அதோடு, மீண்டும் அந்த தொகையை சம்பாதிக்க நன்றாக திட்டமிட்டு கொள்ளவும்.
👉 உங்கள் வருமானத்தையும் கணக்கிட்டு அந்த பொருளை வாங்குவதா, வேண்டாமா என்று நினைத்து பாருங்கள்.
👉 ஒரு பொருளை வாங்கும்போது அதன் உண்மையான விலை என்ன என்றும் கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். அந்த பொருளில் உள்ள மறைந்திருக்கும் செலவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு யோசியுங்கள்.
👉 நம்மில் பலரும் பெரிய செலவுகளை கூட எளிதாக கட்டுப்படுத்தி விடுவோம். ஆனால், கண்ணுக்குத்தெரியாத சின்ன சின்ன செலவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
👉 மதிய உணவை வெளியே சாப்பிடுவது, நினைவுப்பொருள் வாங்குவது போன்ற அதிகம் யோசிக்காமல் செய்யும் செலவுகளுக்கான தொகை சிறியதாக இருந்தாலும் மொத்தமாக பார்க்கும் போது கணிசமாக இருக்கும். இந்த செலவுகளை செய்யும் முன், அவை தேவையா என யோசியுங்கள்.
👉 பணத்தின் உண்மையான மதிப்பு என்பது, நேரத்தை வாங்கும் ஆற்றல் தான். அதாவது பணத்தை சம்பாதிக்க நீங்கள் உழைக்க வேண்டும். செலவு செய்யும்போது, நீங்கள் அதை ஈட்ட செலவிட்ட நேரத்தை செலவு செய்கிறீர்கள். செலவு செய்யாமல் இருக்கும் போது, அந்த நேரத்தை நீங்கள் தக்க வைத்துக்கொள்கிறீர்கள். இது தான் உண்மை.... செலவு செய்யும்போது அந்த பணத்திற்காக நீங்கள் எவ்வளவு நேரம் கடினமாக உழைக்கிறீர்கள் என்று நினைத்து பாருங்கள். வீண் செலவுகளை தவிர்த்து விடுவீர்கள்...
👉 தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன்மூலம் வலுவான சமூகத்தை கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம்.
No comments:
Post a Comment