Friday, March 30, 2018

*இந்துக்களின்_சம்பிரதாயங்கள்*

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான  விளக்கங்கள் (காரணங்கள்)❗

ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும்.

_*நமஸ்காரம்:*_

நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

_*மெட்டி:*_

திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

_*பொட்டு:*_

ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.

_*கோவில் மணிகள்:*_

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

_*துளசியை வழிபடுதல்:*_

இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

_*அரசமரம்:*_

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

_*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:*_

காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

_*கைகளில் மருதாணி  வைப்பது:*_

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.

_*தரையில் அமர்ந்து உண்ணுவது:*_

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்

_*காலையில் சூரியனை வழிபடுதல்:*_

விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

_*கோவிலை வலம் வாருங்கள்:*_

உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையல் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.மகிழ்வான காலை வணக்கங்கள்.....🙂🌤☀💜🌹

*பங்குனி உத்திரம்*

பங்குனி உத்திரம் நாள் :  பங்குனி ( 16 ) | 30.3.2018 வெள்ளிக்கிழமை*_

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

👉 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

  👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

Monday, March 26, 2018

இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (OBC) வாங்குவது எப்படி?

சாதிச் சான்றிதழ் பிசி வாங்கியிருந்தால் இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் வாங்குவது சுலபம். பிசி சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அதை வாங்கிவிட்டு ஓபிசி-க்கு மனுசெய்ய வேண்டும்.

ஓபிசிக்கு மனு செய்யும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர் (Creamy Layer) இல்லை. பொருளதாரத்தில் பின்தங்கியவர் (Non Creamy Layer) என்பதற்கான ஆதாரம் காட்டவேண்டும்.

(Creamy Layer) என்றால் என்ன?
---------------------------------------------
ஒரு குடும்ப தலைவருடைய ஆண்டு வருமானம் ரூபாய 6 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதற்கு கிரிமிலேயர் என்று பெயர். அதாவது அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் என்று பொருள். அவர் பிற்படுத் தப்பட்ட சாதியாக இருந்தாலும், வருமானம் 6 லட்சத்திற்கு மேல் இருந் தால் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

அப்படியானல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) யார்?.
--------------------------------------------------------
குடும்பத் தலைவரின் வருமானம் 6 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அவர் பிறபடுத்தப்பட்டோ ருக்கான சலுகைகளை பெற தகுதி உடையவர். அவர்கள் மட்டும் ஒபிசி சான்றிதழ் வாங்க வேண்டும். அதோடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) என்று தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். ஓபிசி சான்றிதழ் வழங்கும் போதே, இதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள்.

பயப்பட வேண்டாம், நம்மில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் (Non-Creamy) தான்!

8.9.1993 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-ஏ (Group-A) அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களை பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வகைப்படுத்தியிருக்கிறது. குரூப்-ஏ அதிகாரிகளுக்கு கீழே பணிபுரியும் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணியாளர்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களாக (Non-Creamy Layer) குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் போது, மாதந்திர வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், விவசாயத்தின் மூலம் வருகின்ற வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய சர்க்காரின் உத்தரவை மேற்கொள் காட்டி, தமிழக அரசும் விளக்க மான ஒரு ஆணையை 24.4.2000-ல் பிறப்பித்து இருக்கிறது. அதில் வருமானத்தை கணக்கில் எடுத்துக கொள்ள கூடாது என்றும் குறிப்பிட் டிருக்கிறது.

ஓபிசி சான்றிதழ் வாங்க மனு செய்யும் போது, வேலை செய்யும் அலுவல கத்திலிருந்து பெறப்பட்ட சம்பள சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால் மட்டும் கொடுக்கவும். அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள் வார்கள். சம்பளத்தை வைத்து ஓபிசி சான்றிதழ் நிராகரிக்க மாட்டார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது.
--------------------------------------------------
1. ஓபிசி சான்றிதழில் தாசில்தார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். தாசில்தார் (Head QuatersTahsildar) பதவிக்கு கீழே உள்ளவர்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் செல்லாது.
2. தமிழக அரசின் கோபுரசீல் போட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
3. பெயர், விலாசம் மற்றும் சாதியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக் கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் ஓபிசி சான்றிதழ் சரிபார்ப்பவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். ஒரு சிலரே தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள். பெரும்பாலனவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள். அதனால் ஆங்கிலத்தில் சாதி சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் சான்றிதழ் வாங்கும் போதே, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை முன் கூட்டியே கவனித்து வாங்கிவிடுவது நல்லது.

பிசி சான்றிதழ் வாங்குவது கடினம். ஓபிசி வாங்குவது அதைவிட கடினம். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கப்படுகின்ற ஓபிசி சான்றிதழ் 6 மாதத்திற்கு தான் செல்லுபடியாகும்.

அதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். இரயில்வே, வங்கித்துறை, மத்திய தேர்வு வாரியம், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (Unian Public Service Commission-UPSC), ஊழியர் தேர்வு வாரியம் (Sfaff Selection Commi ssion-SSC) போன்ற தேர்வு வாரியங்கள், சில காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விளம்பரம் செய்து, மனு பெறும் போது ஓபிசி சான்றிதழ் கேட்கிறது.

அதுவும் மனு செய்வதற்கு 6 மாதத்திற்குள் (within 6 month) பெற்றிருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த சிரமத்தை கருதி ஒரு சிலர் மனு செய்யாமல் இருந்து விடுகின்றனர். அது சரியல்ல. குறுகிய காலத்தில் ஓபிசி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்றால், ஏற்கனவே ஓபிசி சான்றிதழ் 6 மாத்திற்கு முன்பாக வாங்கியிருந்தால் அதனுனைடய நகலை அனுப்பி வைக்கலாம். பின்னர் வாங்கி அனுப்பலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று விட்டால். நேர்காணலுக்கு செல்லும் முன்பாக புதிய ஓபிசி சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்கிச் சென்றால் போதும்.  காலி பணி யிடங்களுக்கான விளம்பரங்கள் வரும் போது 27 சதவீத இட ஓதுக்கிட்டின் கீழ் மனு செய்யலாம். தகுதி இருந்தும் மனு செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

Sunday, March 25, 2018

*மன முதிர்ச்சி*

||| மன முதிர்ச்சி என்றால் என்ன?
      What is Maturity of Mind ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
1.Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected. with material things.

+ இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*
* Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.
Live your Life & Love your Life.
Good morning.
Have a Fine Week end

*இராம நவமி*

🌸🙏🏻🌼🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌼🙏🏻🌻🙏🏻                 இராம நவமி ...... !!                           🌸🙏🏻🌻🙏🏻🌼🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌼🙏🏻

இராம நாமத்தின் மூலம்

1.   நமக்கு நன்மை வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை இடைவிடாமல்   கூறவேண்டும். நமது  ஒவ்வொரு மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்.  

2. நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே மிகச்சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த              தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .

3.  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

4. ' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே  சொல்லவேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும்போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்கவேண்டும்.

6. ' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

7. எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே! 


8.  'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும்.

இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

9. ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்திலிருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே  கோவிலாகும் .

10. எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .

11. நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

12. நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும்.

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது ) ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனமிருந்தால்  மார்க்கமுண்டு.

பெண்கள்  சமைக்கும்பொழுது  ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி ......அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும்.

14. வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும்.

15. 'ராம  நாமாவை  உரக்க சொல்லுங்கள்.   காற்றில்
  ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும்.

சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.  *ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

'ராம  நாமா'  சொல்லும்பொழுது  ஏற்படும்  தூய  அதிர்வானது  காற்றில்  பதிந்துள்ள  மனிதர்களின்   தீய   எண்ணங்களால்  ஏற்பட்ட   தீய  அதிர்வுகளை ,தீயசக்திகளை....... .....நோய்க்கிருமிகளை  அழித்துவிடும்.

'ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள  DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு  காரணமான ........கோபம் , வெறுப்பு,  பொய்,  பொறாமை , சூது,  போன்ற   தீய  குணங்களின்  தன்மைகளுக்கு  காரணமான....gene coding யை  அழித்து .........ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு  காரணமான   ராமரின்  குணங்களை  ஏற்படுத்தும்.('யத்  பாவோ  தத்  பவதி'--எதை  நினைக்கிறாயோ  அதுவே  ஆகிறாய்!)

'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .

அகில  உலகையும்  வியாபித்து   காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய   சக்தியே  " ராம் ".

அதுவே   உருவம்   கொண்டபோது ,  தசரத ராமனாக , சீதாராமானாக,  ரகுராமனாக ,  கோதண்ட ராமனாக  பெயருடன்  ( நாம ரூபமாக )  வந்தது.

உண்மையில்  சத்தியமாம்   ஒரே  உண்மை  ராம்  ஒருவனே. ராம்  அனைத்திலும்  உள்ளான்,  அனைத்தும்   ராமில்  உள்ளன.  ராம்  ஒருவனே  உண்மையான ,  பேரன்பே  வடிவான  உணர்வுமய  வஸ்து .........பிரம்மம்  என்பதும்   அவனே !

எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர்   அனைத்தும்  ராமில்  ஒடுங்கவேண்டும்.

இடைவிடாது  ராம  நாமத்தை  ஜெபித்து  வந்தால்  அழியா  இன்பத்தை  ராம்  அருள்வான்  என ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்    தமது  தந்தையிடம்  உபதேசமும்  பெற்று  ராம  நாமத்தில்  கரைந்து  ராம  ரசமாய்,  அதன்  மயமாய்    தானே   ஆனார்.

16. நமது  ஒரே  அடைக்கலம் 'ராம  நாமா'.  அதுவே  நம்மை  சம்சார  சாகரத்தில்  இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை  அறுக்கும் .

17. மற்ற  எல்லா  தர்மங்களும்  ஒன்று  பாவத்தை  நீக்கும் .  மற்ற  ஒன்று  புண்ணியத்தை  தரும். ஆனால்  'ராம  நாமா'  ஒன்றே  பாவத்தை  அறுத்து, புண்ணியமும்  அர்ப்பணமாகி  பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி )    முக்தி  தரும்.

18. 'ராம  நாமா'  மட்டுமே  நன்மையே  கொண்டு வந்து  தரும் .  மருந்தின்  தன்மை  தெரியாமல்  சாப்பிட்டாலும்  அது  நோயினை  குணப்படுத்திவிடும்.  அது போல  'ராம  நாமா' வும்  சொல்ல சொல்ல  பிறவி  நோயை, துக்க  நோயை ,
ஆசை  என்ற   சம்சார  நோயை  அழித்துவிடும்.

19. நமது  கைகளால்  எது  கொடுத்தாலும்,  அது  நமது  தலைவனாகிய  ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில்  உள்ள  மனித வடிவில்  உள்ள எஜமான்  ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம்.  எது ,  எதனை  எவரிடம்  இருந்து  பெற்றாலும்  நமது  அன்னையாகிய  ஸ்ரீ ராமனே ( எதிரில்  உள்ள  மனித  வடிவில் )    கருணையுடனும், அன்புடனும் நமது    நன்மைக்காக    தருகிறான்.  இந்த  உணர்வு  பெருக, பெருக   ஸ்ரீ ராமனே   தந்து , வாங்குகிறான். ( எதிரில்  உள்ள  மனிதரை  கவனிக்காமல்   அவரின் ....அந்தராத்மவுடனே   பேசுகிறோம்.......ராம்!  அன்னையே   இந்த  உடலுள்   இருந்து  நீயே  பேசி, இயங்கி,  செயல்படுகிறாய் ......என  வணங்க,  நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன்  ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன்  ஸ்ரீ ராமன்.


20. 'ராம  நாமா' சொல்ல ,  சொல்ல  நிகழும்  எல்லா  செயல்களும் ,  நிகழ்ச்சிகளுக்கும்    ' அந்த  ஒன்றே !'  காரணமாகிறது என்பதும் ...... எல்லாம்  அந்த  பிரம்மத்தின்  விளையாட்டே !.......என்பதும்  உள்ளங்கை  நெல்லிக்கனியாய்  உணரப்படும் .

21.'ராம  நாமா'   சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன்  மூலம்  .....  பார்ப்பது  ராம்  ,  பார்வை  ராம்,  பார்க்கப்படுவது  ராம்,  கேட்பது  ராம், கேள்வி  ராம்,  கேட்கபடுவது  ராம்,  புலன்கள்  ராம்,   உணர்வது  ராம்,  உணரபடுவது  ராம், உணர்வு ராம், இந்த   பிரபஞ்சம்  ராம்,  இந்த  மனம்  ராம் , புத்தி  ராம்,  உடலும்  ராம்,  ஆன்மா  ராம்,  24   தத்துவங்கள்  ராம் ,  ..... .........நன்மை,   தீமை , இன்பம்  துன்பம் ,  எல்லாம்  ராம் ,   எல்லாம்   ராம் , எல்லாம்  ராம்.

இத்தகைய   .'ராம  நாமா' வில்  பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக   சித்தமாக ) அனைத்தும்  ஒன்றாக   அறிவதே  உண்மையான  அறிவு.   அனைத்தும்  ஒன்றாக ......ராமனாக   ( ஆத்மா  ராமனாக )  பார்ப்பதுவே  ......... எல்லா  எண்ணங்கள் ....... எல்லா  செயல்கள் ........எல்லா  உணர்ச்சிகளிலும் ...........இறை  உணர்வை  உணர்வதுவே ............இந்த  பிறவியின்  பயனாகும்

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...