Thursday, March 22, 2018

நாம் ஏன் கோவிலுக்கு செல்கின்றோம்?

இன்றைய தகவல் 😃🤷🏻‍♀😃🤷🏻‍♂😃😃

நாம் கோவிலிற்கு சென்று கடவுளை வழிபடுவதற்கான காரணம் என்ன?
ஏன் கோவிலுக்கு செல்கின்றோம்?


 கோவில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமல்ல. விஞ்ஞான ரீதியாக மனிதனின் உடலுக்கு பல நன்மைகள் செய்வதாகவும் சொல்லலாம். முன்னோர்கள் ஏன் கோவில் வழிபாட்டு முறை கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம்.

🙏 சம்பிரதாயம் என்னும் பெயரில் பல அறிவியல் பூர்வமாக நாம் உடலில் உள்ள நோய்களை போக்குவதற்கும், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் பல சடங்கு முறைகளை ஏற்படுத்தி உள்ளனர். முதலில் நாம் கோவிலுக்கு உள்ளே செல்லும் போது செருப்பை கழற்றி விட்டு செல்லுவோம்.

🙏 ஏனென்றால் கோவில்களை சுற்றி கருங்கற்களை பதித்து வைத்து இருப்பார்கள். வெறும் காலுடன் கோவிலை சுற்றும் போது நாம் கால்களில் உள்ள வர்மபுள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் உள்ள பல நோய்கள் நமக்கே தெரியாமல் குணமாகும்.

🙏 மேலும் தோப்புக்கரணம் போடும் போது நம் காதுகளை இழுத்து உட்கார்ந்து எழும் போது, நம் மூளை பகுதி சுறுசுறுப்பாகும். அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவோம்.

🙏 துளசி இலை போட்ட தீர்த்தத்தை குடிக்கும் போது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். முட்டி போட்டு கும்பிடுவதால் வயிற்று கழிவுகள் சீராக வெளியாகும். விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் இவை நான்கும் வாசனை பொடிகள் மட்டுமல்ல சிறந்த கிருமி நாசினியும் கூட.

🙏 மனதை ஒரு நிலைப்படுத்த கோவிலில் ஒரு சடங்கு செய்வார்கள். அதாவது திரையை விலக்கி கடவுளை காண்பிக்கும்போது நாம் கண்ணின் கவனம் சிதறாமல் இறைவனை காண வேண்டி தீபாராதனை காட்டுவார்கள், காதின் கவனம் சிதறாமல் இருக்க மணி அடிப்பார்கள், மூக்கின் கவனம் சிதறாமல் இருக்க ஊது பக்தி வாசனையும், வாய்க்கு பிரசாதமும், தோலுக்கு எல்லோர் உடலிலும் படும்படி தீர்த்தம் தெளிப்பார்கள்.

🙏 கோவில் பிராகாரத்தை பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோவிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன
🙏🏽🙏🏼🙏🏻🙏🏽🙏🏼
உங்கள் நாதன்

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...