Saturday, August 12, 2023

செங்காந்தள் மலர் --புற்றுநோயை குணப்படுத்துவதில் தமிழ்நாட்டின் மாநில மலர்..!

புற்றுநோயை குணப்படுத்துவதில் தமிழ்நாட்டின் மாநில மலர்..! ஆராய்ச்சிகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்..!!


செங்காந்தள் மலர் 




ஆராய்ச்சிகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்..!!

Saturday, August 5, 2023

வெள்ளை நிற காகிதத்தில் மையூற்றி எழுதப்பட்ட மாயக்காரர்கள்

வெள்ளை நிற 
காகிதத்தில் மையூற்றி 
எழுதப்பட்ட மாயக்காரர்கள் 



ஒரு துளி நீருக்கும்
கிழிந்து போகக் கூடியவர்கள்

கொஞ்சமாய் 
அடிக்கும் காற்றுக்கும்
இடம் பெயரக் கூடியவர்கள் 


பாசத்தைப் பங்கு போட்டு
பத்திரமாய்
பத்திரப் படுத்தி வைப்பவர்கள்

அவசரத்திற்குத் தேடும் போது
கண்களுக்குத் தென்படா 
அரிதானவர்கள் 


இணையவழி காதலால்
ஆதாரங்கள் எதுவுமின்றி
உழல்பவர்கள்



வழவழப்பாய்
வண்ண வண்ணமாய்
விதவிதமான காட்சிகளாய்
விலையேறிப் போன 
விலைபோகா காகிதங்களாய்
மனிதர்களிங்கு..

தி. இராஜபிரபா
தேனி

Wednesday, August 2, 2023

திருப்பதி லட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

திருப்பதி லட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 


திருப்பதி லட்டின் வயது 308; லட்டுக்கு முன் வடை முக்கிய பிரசாதமாக இருந்தது!

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு.

 இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

 திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும்.

இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது.

 இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, நாளை (ஆக.,3), 308 வயதாகிறது. கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.

லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு, வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.








திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கோவில் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டுதான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள்.

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

திருமலையில் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் ‘ஸ்ரீவாரி பிரசாதம்’ என்றும், ‘லட்டு பிரசாதம்’ என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு, பிரத்யேகமாக ஒரு மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மடப்பள்ளி ‘பொடு’ என்று அழைக்கப்படும். சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2.80 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப் படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, எம்பெருமான் ஏழுமலையான் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்றும் தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. லட்டுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான ‘பூந்தி’யை தயாரிக்க ‘தெர்மல் ஸ்டவ்’ எனப்படும் 40-க்கும் அதிகமான அதிநவீன அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 750 கிராம் எடையிலான பெரிய லட்டு மற்றும் 175 கிராம் எடையிலான சிறிய லட்டுவும் தயார்செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

திருப்பதி லட்டு பிரசாத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?

திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

‘கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.

ஒரு நாள் பெருங்செல்வம் படைத்த வியாபாரி, தன் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தால் ஏழுமலையானுக்கு மலை போன்று பிரமாண்டமான லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டி கொண்டாராம். அவருடைய வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றினார். அவர் சொன்னபடி பெரிய லட்டு செய்து இறைவனுக்கு வழங்கினார். லட்டு பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டன. முன்னர் மிராசுதார்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். 1996ம் ஆண்டில் மிராசுதார்களின் உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஒரு லட்டு தயாரிக்கவே 51 பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்தனை பொருட்கள் பயன்படுத்துவதால் மட்டுமே திருப்பதி லட்டின் சுவை தூக்கலாக இருக்கிறது. 5,100 லட்டுகள் தயாரிக்க மட்டுமே 852.5 கிலோ பொருட்கள் பயன்படுத்துகின்றனர்.

லட்டு தயாரிக்க கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள். நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ் தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

பூந்தியை கோயிலுக்கு உள்ளே எடுத்துச் செல்வதற்கும், தயாரிப்பு கூடத்திலிருந்து லட்டுகளை கவுன்ட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கும் கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய், பிரத்யேகக் குழாய் மூலம் கோயிலுக்கு வெளியிலிருந்து உள்ளேயும், கோயிலுக்கு வெளியே உள்ள பூந்தி தயாரிப்புக் கூடத்துக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

திருப்பதியில் 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.

ஆஸ்தான லட்டு

முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப் படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு

கல்யான உற்சவ லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.

புரோகிதம் லட்டு

புரோகிதம் லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக் கப்படுகிறது. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

திருப்பதி லட்டு பிரசாதம் வரலாறு!!

திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருப்பதியில் முதலில் பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் விரைவில் கெட்டுப்போக கூடியவை என்பதற்காக கடந்த 1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு ‌பிரசாதமாக லட்டு உதிரியாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது. முன்னர், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே முழு லட்டு வழங்கும் நடைமுறை இருந்தது.

1940-ம் ஆண்டிலிருந்துதான் பக்தர்கள் அனைவருக்கும் பூந்திக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு அளவும் குறைந்துவிட்டது. ஆனாலும், சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களைச் சொக்கவைக்கிறது.

இந்த திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. தற்போது, 307 வயதைக் கடந்து, 308 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள திருப்பதி லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தேவஸ்தானம் கணக்கிட்டிருக்கிறது.

புவிசார் குறியீடு

திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.

உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவகத்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது.

உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே அளவில் சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.

*whatsapp குழு இணைவதற்கான லிங்க்**

Friday, June 30, 2023

_*9ன் சிறப்பு தெரியுமா?*_

  🕉️ ஆன்மீகம்🕉️ கிருஷ்ணகிரி🕉️ 


_*9ன் சிறப்பு தெரியுமா?*_ 




ஒன்பதின் தத்துவம்
என்ன என்பதைத் 
தெரிந்து கொள்ளுங்கள்

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,  

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 

எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 🚩🚩

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!

ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

 _*நவ சக்திகள்*_  

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

 _*நவ தீர்த்தங்கள்*_ 

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

 _*நவ வீரர்கள்*_ 

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

 _*நவ அபிஷேகங்கள்*_ 

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

 _*நவ ரசம்*_ 

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

 _*நவக்கிரகங்கள்*_  

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

 _*நவமணிகள் நவரத்தினங்கள்*_ 

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

 _*நவ திரவியங்கள்*_ 

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

 _*நவலோகம் (தாது)*_ 

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

 _*நவதானியங்கள்*_ 

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

 _*சிவவிரதங்கள் ஒன்பது*_ 

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

 _*நவசந்தி தாளங்கள்*_ 

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

 _*அடியார்களின் பண்புகள்*_ 

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

_*(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)*_

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

 _*அடியார்களின் நவகுணங்கள்*_ 

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

 _*நவநிதிகள்*_ 

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

 _*நவகுண்டங்கள்*_ 

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,

 _*பிரதான விருத்தம்*_ 

1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

 _*நவ பிரம்மாக்கள்*_ 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

 _*நவக்கிரக தலங்கள்*_ 

1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

 _*நவபாஷாணம்*_ 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

 _*நவதுர்க்கா*_ 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

 _*நவ சக்கரங்கள்*_ 

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

 _*நவநாதர்கள்*_ 

1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

 _*உடலின் நவ துவாரங்கள் :*_

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

 _*உடலின் _ஒன்பது சக்கரங்கள் :*_

1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோமம்
🙏🏼

Saturday, February 25, 2023

குளிர்சாதன பெட்டியில் உணவு பொருட்களை வைக்கும் முறை தெரியுமா?

🍦🍧🍨🍇🍈🍉🍊🍋🍎🌽🌶🍆🍗🐟🦀


குளிர்சாதன பெட்டியில் உணவு பொருட்களை வைக்கும் முறை தெரியுமா?







🛒குளிர்சாதன பெட்டியில் வாடை வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி உள்ளே வைக்க வேண்டும்.


🛒பால், குழம்பு, சட்னி வகைகள் முதலியவற்றை சூடாக உள்ளே வைக்கக்கூடாது.


🛒பழச்சாற்றை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.


🛒காய்கறிகளை எப்பொழுதும் காகித்தால் சுருட்டி துணிப்பையில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாமல், தோல் சுருங்காமல் இருக்கும்.


🛒வெண்ணெய், பாலாடை கட்டி, பன்னீர் போன்ற உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் அது உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.


🛒பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து வைத்தால் கெடாமலும், நிறமும் மாறாது.


🛒தேங்காயை உடைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.


🛒தர்பூசணி பழம், சாத்துக்குடி எலுமிச்சை போன்ற பழங்களை அதிக பட்சம் ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருக்கலாம்.


🛒எக்காரணத்தைக் கொண்டும் வாழைப்பழங்கள் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது. அவற்றை எப்போதுமே நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும்.


🛒பழங்களை ஒரு உரைப்பை அல்லது டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுது பழங்கள் சுருங்காது.


🛒இரண்டு கதவு உள்ள பெட்டியில் அதாவது ஃப்ரீஸரில் உள்ளே இடம் காலியாகத்தான் இருக்குமானால், நீங்கள் சேமியா, ரவை, பிரியாணி அரிசி, பருப்பு வகைகள், கடலை மாவு பாக்கெட் இதெல்லாம் வைத்து கொள்ளலாம் அப்படியே இருக்கும்.


🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

Monday, January 30, 2023

🌹 *"பெண்" என்பவள் ... "எல்லைகள்" இல்லா ... பேரின்பம் ... !!!*

🌹 *"பெண்" என்பவள் ... "எல்லைகள்" இல்லா ... பேரின்பம் ... !!!*





🌹 *"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது ... !!!*




🌹 *ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான் ... !!!*




🌹 *பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது ... "சோகமா" இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது ... !!!*




🌹 *பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும் ... ஆனால் அந்த சிரிப்புக்குள் "ஆயிரம் கவலைகள்" இருக்கும் ... !!!*




🌹 *"பெண்" ஒரு "அழகிய இசைக்கருவி" ... இரைச்சல் வருகிறதே என்று "குறை" சொல்வது முட்டாள்தனம் ... "இசைக்க" தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள் ... !!!*



🌹 *கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண் ... பிடித்தவர்களிடம் மட்டும் ... !!!*



🌹 *தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு "அறிவும் திறமையும் அதிகம்" என்று தெரிந்த பின் ... பெண் சந்தோசம் கொள்கிறாள் ... ஆண் சந்தேகம் கொள்கிறான் ... !!!*




🌹 *பெண்களுக்கு வீரமான ஆண்களை விட .. "அன்பான" ஆண்களை தான் மிகவும் பிடிக்கும் ... !!!*




🌹 *ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது "பழி" சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை "போராடும் உறவுக்கு" பெயர்தான் "மனைவி" ... !!!*




🌹 *யார் மீது கோபம் வந்தாலும் "அதை" பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம் ... !!!*





🌹 *ஆணின் "அன்பை உணராது" எந்த "பெண்ணும்" சந்தோஷமாக வாழ்ந்தது இல்லை ... பெண்ணின் "உணர்வுகளை" புரிந்து கொள்ளாமல் "ஆண்கள்" இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை ... !!!*




🌹 *பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை ... அவளை "காதலித்தவனை" தவிர ... !!!*



🌹 *ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு ... ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்து விட முடியாது ... !!!*



🌹 *தனக்கே வலித்தாலும் தன்னை "நேசித்தவர்களுக்கு" வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம் ... !!!*



🌹 *பெண்கள் ரோஜா செடி போன்றவர்கள் ... கல்லும் இருக்கும் ... மண்ணும் இருக்கும் ... முள்ளும் இருக்கும் ... கல் கலையாவதும் ... மண் மணமாவதும் ... முள் முளையாவதும் ... பெண்களின் கைகளிலே தான் உள்ளது ... !!!*



🌹 *உயிரை பெற்று எடுக்கும் பலத்தையே பெண்களுக்கு கொடுத்த இறைவன் ... !!! அழுகையை பலவீனமாக கொடுத்து அடிமையாக்கி விட்டான் ... !!!*




🌹 *அழகென்றும் ... அறிவென்றும் ... கறுப்பென்றும் ... சிகப்பென்றும் ... அடையாளம் எத்தனை ...? அனைத்திலும் சிறப்பு பெண்மை ... !!!*




🌹 *கடவுள் எழுதிய கவிதை பெண் ... ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண் ... !!!*



🌹 *உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான் ... பெண் அதில் ஓடும் வற்றாத நதி ஆகிறாள் ... அவள் போகும் இடமெல்லாம் பசுமை .. புகழ்.. வெற்றி .. மகிழ்ச்சி ... !!!*



🌹 *ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான "அன்பான குணமே" காரணம் ... !!!*




🌹 *பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்... !!!*




🌹 *உங்கள் அம்மா பெண் என்பதால் ... இல்லை நீங்கள் சிறந்த "ஆண்" என்பதால் ... !!!*




😊💐🙏

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...