Sunday, December 30, 2018

*சாமுராய் வீரன் - முரட்டுஎலி*

எனர்ஜிட்டிக் கதை

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.*

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

*நான் பொறுமையாக காத்திருந்தேன்.*

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’* என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

*’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."*

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

காத்திருக்கப் பழகுங்கள் !

Saturday, December 29, 2018

*மதம்*

2000 வருடத்திற்கு முன் இந்து என்கிற மதமே இல்லை...கிறித்தவன், இஸ்லாமியன் வந்த பிறகுதான் பார்ப்பனன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள இப்படி ஒரு மதத்தை உருவாக்கினான்..  இது திராவிட குஞ்சுகளின் கூற்று..

முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. இதற்க்கு சரியான உச்சரிப்பு matham  .. madham  இல்லை..  matham  என்றால் நம்பிக்கை, மதம் என்றால் வெறி.. தமிழில் tha , dha  எல்லாவற்றுக்கும் ஒரே எழுத்துதான்.. சமஸ்கிருதத்தில் வெவ்வேறு.. இவர்கள் சொல்லும் , திராவிடன் என்கிற சொல் கூட சமஸ்க்ரித சொல்தான்.. தென்னிந்தியா நிலப்பரப்பை குறிக்கும் சொல்.. அது இருக்கட்டும்..

அவர்கள் சொல்வது உண்மைதான். இந்து என்கிற மதம் 2000 வருடத்திற்கு முன் இல்லை.. அதற்க்கு பெயர் சனாதன தர்மம்.. ஆனால் அதுவும் பெயர் இல்லை.. அந்நியர்கள் இங்கே படையெடுக்க வந்த பொழுது சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்களை ஸ்  எழுத்தை விட்டு, இந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தார்கள்.. ஏன் அதற்க்கு முன் பெயர் இல்லை என்றால், அது ஒன்றுதான் உலகம் பூராகவும் இருந்தது.. ஒரு இடத்தில ஒருவர் மட்டும் இருந்தால், sir என்று கூப்பிட்டால் போதும், திரும்பி பார்த்துவிடுவார்.. இதே பலர் இருந்தால் பெயர் சொல்லி அழைத்தால்தான் அவருக்கு தெரியும்.. அப்படிதான் இதுவும்..

என்ன இதெல்லாம் பேத்தலாக இருக்கிறது? இந்தியாவை தாண்டி இந்து மதம் எங்கே இருந்தது.. விட்ட கலர் கலரா ரீல் விடறீங்களே என்று நீங்கள் நக்கலடிப்பது நன்றாக என் செவிகளுக்கு கேட்க்கிறது... நான் சில முக்கியமான ஆதாரங்களை ஆராயாமல் இந்த பதிவை இடவில்லை.. ஆதாரங்கள் கீழே.. ஆர்வமுள்ளவர்கள் சற்று பொறுமையாக 15  நிமிடங்கள் செலவழித்து படிக்கவும்

1 இன்று கிறித்தவர்களின் மிகவும் முக்கியமான புனித நகரம் Vatican .. சொல்ல போனால் இன்று வல்லரசாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட இவர்கள் பேச்சை மீறாது.. pope ஆண்டவர் வசிக்கும் நகரம்.. ஆனால் நமக்கு மறைக்கப்பட்ட உண்மை, அங்கே நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் இங்கே 9 BC (2900 வருடங்களுக்குமுன்) ஐ சேர்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.. 2900 வருடங்களுக்கு முன் என்ன பெரிய communication இருந்தது நம் நாட்டிலிருந்து அங்கே சென்று மதத்தை பரப்ப? அங்கே எப்படி இது சென்றது? அந்த சிவலிங்கம் இன்றும் Vatican city உள்ள Gregorian Etruscan Museum இல் வைக்கப்பட்டிருக்கிறது.. நம் எதனை பேருக்கு இது தெரியும்? ஆதாரம் கீழே, அந்த புகைப்படத்தோடு

https://www.booksfact.com/religions/siva-linga-gregorian-etruscan-museum-vatican-city-vatika.html

2 முஸ்லிம்களின் தாய்வீடான (மத ரீதியாக) சவூதி அரேபியவில் இஸ்லாம் தோன்றுவதற்குமுன் கிடைத்த ஒரு சரஸ்வதி தேவியின் உருவ சிலை.. இது இன்றும் british மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.. அந்த புகைப்படம் கீழே ஆதாரமாக.. இன்னும் detailed ஆக வேண்டுமென்றால் google செய்து பாருங்கள்

3 Mexico வில் காலம் காலமாக தொடங்கி இன்று வரை Situa Raimi என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இது என்னவென்றால் Ram Sita என்கிற பெயர்களை போற்றி தசரா அல்லது நவராத்திரி நேரத்தில் மெக்ஸிகோ வில் கொண்டாடப்படும் பண்டிகை .. இது எப்படி அங்கே சென்றது? link கீழே அளித்திருக்கிறேன்..

https://ramanan50.wordpress.com/2015/01/27/navaratri-is-rama-sita-festivalshiva-in-mexico/

4 Greece நாட்டில் herakles என்கிற ஒரு கடவுள் உண்டு.. இது 2200 வருடங்களுக்குமுன் அலெக்சாண்டர் படையெடுப்பின்பொழுது குறிப்பிட்டிருக்கிறார்கள்..   அது வேறு யாரும் இல்லை... நம் கிருஷ்ணர்..
2200 வருடங்களுக்கு  முன் கிருஷ்ணர் எப்படி அங்கே போனார்?

5 பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் உருவ சிலைகள் Gympie எனும் ஆஸ்திரேலியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டவை.. படங்கள் கீழே.. மேலும் விவரங்களுக்கு google செய்துகொள்ளலாம்..

இது போல இன்னும் பலவற்றை கொடுக்க முடியும்.. உலகத்தில் எல்லா மதத்திற்கும் தாய் மதம் இந்து மதம்தான்.. காலப்போக்கில் பல பிரிந்து சென்றதுதான் உண்மை.. நான் முன்பே சொன்னதுபோல நாம் ஒன்றும் சிந்து நதி நாகரீகத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.. சரஸ்வதி நதி நாகரிகம்தான் முதல் நாகரீகம்.. இன்று சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரத்தை satellite புகைப்படங்கள் நம் பகுத்தறிவாளர்களுக்கு காண்பித்துவிட்டது.. சரஸ்வதி நதி வற்ற துவங்கியவுடன்  பலர் வேறு இடங்களுக்கு குடி பேய்நர்தனர்.. முக்கியமாக central asia விற்கு.. அங்கே சந்திரனை வழிபட துவங்கினார்கள்.. அதிலிருந்து வந்ததுதான் zoroastrianism .. அதிலிருந்து வந்ததுதான் இஸ்லாமும் கிறித்தவமும்.. இன்றைக்கும் zoroastrianism க்கும் ரிக் வேதத்திற்கும் பல தொடர்புகள் இருப்பதை நிரூபிக்க முடியும்..

http://www.patheos.com/blogs/drishtikone/2007/01/similarity-between-zoroastrians-and-vedic-people-persecution-islam/

ஆகவே நம் வரலாறு திட்டம்போட்டு மறைக்கப்பட்ட ஒன்று.. அது வெளியே தெரியாமல் சிலகாலம்தான் மறைக்க முடியும்.. என்றைக்கும் எப்பொழுதும் எல்லோரையும் முட்டாளாகவே வைத்திருக்க முடியாது.. திராவிட கட்சிகள் உட்பட
ஜெயஸ்ரீ ராஜன் அய்யங்கார் பதிவு..
Just farwarded

Thursday, December 27, 2018

*ஆண்களுக்கு சமர்ப்பணம்*

🌼*பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக    ஆணை படைக்க ஆரம்பித்தார்*.

🌼*ஒரு நாள், இரு நாள் அல்ல*.

🌼*தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*.

🌼*இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.

🌼*அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*.

🌼*இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*.

🌼*அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*.

🌼*சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்*.

🌼*அவனுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவனே அவனை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 24மணி நேரம் உழைக்க வேண்டும்*.

🌼*இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்*.

🌼*“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை*.

🌼*ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை*.

🌼*அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன் *.

🌼*ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன் *.

🌼*அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான் *.

🌼*அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.

🌼*கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.

🌼*சிரிப்பு வந்தாலும் அதை  கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*.

🌼*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான் *.

🌼*மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்*.

🌼*“ஓ………இந்தளவுக்கு ஆனால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது*.

🌼*“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*.

🌼*அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்*.

🌼*அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது *.

🌼*“ஒரு ஆணின்  கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்*.

🌼*ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.

🌼*இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை*.

🌼*“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.

🌼நன்றி 🌼

🌼படித்தால் மட்டுமல்ல
பகிரும்போதும் சந்தோசமே.🌼

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்.

Sunday, December 23, 2018

*ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?*

👩‍🎓 🙏

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்... 

இன்று 23.12.2018 ஆருத்ரா தரிசனம்......🙏🌙🔱 சிவசிவசிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

*"வன்னிய குல சத்ரியர்"*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥பிறந்தசாதி பெருமையை அறிவோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔥வன்னியர் மட்டுமே சத்ரியர்.
அரசு ஆணை எண் .271.
நாள்.13.6.1929.ல் வெளியீடு .
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள்.

🔥தமிழ்நாட்டில்,
"வன்னிய குல சத்ரியர்"

🔥ஆந்திராவில்,
"அக்னி குல சத்ரியர் "

🔥கேரளாவில்,
"சம்பு குல சத்திரியர்"

🔥கர்நாடாகாவில்,
"திகளர் குல சத்ரியர்"

🔥என தென்னிந்தியா முழுவதும்,
அரசாணை வழங்கப்பட்டது.

🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம்,
மதராஸ் பிரசிடென்சியில்,

🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து

🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்று
சில சாதித் தலைவர்கள் நீதிமன்றத்தில்  உரிமை கொண்டாடினர்.

🔥 இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

🔥தென் இந்தியாவில் வன்னியர்  மட்டுமே "சத்ரியர்" என அரசாணை எண் .26  கெசட்டிலும் வெளியிட்டனர்.

🔥"வன்னிய குல க்ஷத்ரியர்" என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய
இளையதலைமுறை
அறிந்து கொள்ள வேண்டும் .

🔥நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்" என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை .

🔥கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி ,பொருளாதாரம் ,ஆட்சியில் இருந்து  வந்த நாம்

🔥இடைப்பட்ட கால படையெடுப்பு களில்  ஆட்சி அதிகாரத்தை இழந்ததனால்  ,

🔥நம் வரலாற்றையும், கல்வியையும்  தொலைத்து
600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ள பட்டோம் ,

🔥வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு  கடைசியாக  வந்த ஆங்கிலேயன்  நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று  நம்மை இணைக்க பார்த்த போது கொதித்து எழுந்தனர்.

🔥 நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே
குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்ப அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும் , ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

🔥1872 ஆம் ஆண்டு
குன்னம் முனுசாமி பிள்ளை  அவர்களது
"ஜாதி சங்கிரச்சரம்"
என்ற நூலில்
வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

🔥காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார் .

🔥 முனுசாமி நாயகர் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார் .

🔥கா. அண்ணாசாமி நாயகர் " வன்னிய குல விளக்கம் " என்ற நூலை தமிழ் ,தெலுங்கு ,ஆங்கிலம் , மூன்று மொழிகளில் வெளியிட்டார் .

    🔥பல்வேறு இலங்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும் ,கல்வெட்டு  செய்திகளையும் ,வட மொழி சூத்திரங்களையும் , தாமிர செப்பேடு செய்திகளையும்

🔥பல ஊர்களுக்கு சென்று அலைந்து திரிந்து சேகரித்து புத்தகமா அச்சிட்டு இருந்தார்.

🔥சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவை என்று சான்றுகள்
பெற்று இணைத்து இருந்தது.

🔥அரசு முடிவு  பல்வேறு நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த
ஆங்கில  அரசு இறுதியில் நமக்கு,

🔥 "வன்னிய குல க்ஷத்ரியர் "என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது .

🔥எல்லா ஆவணங்களிலும்
" வன்னிய குல க்ஷத்ரியர் "
என்று குறிப்பிட வேண்டும் என்று அரசானை வெளியிட்டது .

🔥தெலுங்கு வன்னியர் அன்று  சீமந்திர பகுதி தமிழகத்துடன் இனைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர் ,

🔥அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர் .

🔥மேலும் கோலார், பெங்களுர் , மைசூர் , கேரளா பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை

"திகளர் " மற்றும்  "சம்பு குல க்ஷத்ரியர்கள்" என்கின்றனர் .

🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

🔥அரசனை வெளியீடு
1929 ஆம் ஆண்டு ஜூன்13சென்னைமான சட்டதுறைமூலம்அரனை எண்,271இல்

🔥தமிழ்நாட்டில்

"வன்னிய குல க்ஷத்ரியர் " என்றும் .

🔥தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில் .

"அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது .

🔥சுமார் 60 ஆண்டுகள்
போராடி இந்த பெயர்களை பெற்று தந்து ,
🔥🔥🔥🙏🏻🔥🔥🔥
நமக்கு
சரித்திர பெருமையையும்,
நாம் தான் தென்னிந்திய
ராஜபுத்திரர்கள் என
சான்று வாங்கி நமக்கு
பெருமையை சேர்த்து சென்றனர்.
🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...