Saturday, December 15, 2018

*ஆரா (AURA)*

🌷2point 0 வில் சொல்லப்படும் ஆரா (AURA) பற்றி சிறு விளக்கம்!!🌷

🌹நமது ஸ்தூல உடலுக்கு வெளியே உள்ள மற்றொரு சூட்சும உடல் காரண உடல் ஆகும்.

வெளியில் இருக்கும் ஆன்மாவின் அனைத்து பிறவிகளின் கர்மாவையும் சேமித்து வைக்கும் கர்ம வங்கியாக இந்த காரண உடல் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் தெய்வீக சக்தி  தொடர்பு இருக்கிறது.

இது காரண உடல் வழியே, நம்மை படைத்த பேராற்றல் கொண்ட இறை ஒளியுடன் நம்மை இணைக்கிறது.

இது ஒரு ஒளிக்கற்று போல இருக்கும். இறைசக்தியுடன் நமது தொடர்பின் உறுதியை பொறுத்து சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

தியானம் செய்ய, செய்ய ஆரா விரிவடையும்....

அது ப்ரபஞ்சம் முழுவதும் விரிவடையும் தன்மையுடையது....

சித்தர்கள், பூமியில் இருந்துக்கொண்டே, மற்ற கிரகங்கள் பற்றியும், அவையின் தன்மை பற்றியும் சொல்லியுள்ளார்கள்...

மக்களால் விரும்பபடும் தலைவர்ளின், ஆராகூட, விரிவாக இருக்கும்....

நம்மிடமிருந்து விரியும் ஆரா,    இறைவனிடம் இருந்து( இங்கு இறை என்பது சுத்தவெளியை குறிக்கிறது)   மற்றுமொரு ஒளிக்கற்று தெய்வீக சக்தி தொடர்புடன் கலந்து நமது சஹஸ்ரார சக்கரத்திற்கு வருகிறது.

இது கடவுள் நம்முடன் ஏற்படுத்தும் தொடர்பு.....

அந்தகரண ஒளிக்கற்றின் அளவானது இறைவன் எந்த அளவிற்கு நம்மை தொடர்பு கொள்கிறாரோ, நம்மை கருவியாக கொண்டு செயல்படுகிறாரோ,
அந்த அளவிற்கு பெரியதாகவும் இருக்கும்.

நாம் எந்த அளவு இறைநிலையாேடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவில் ஆரா வடிவில் இறைசக்தி நம்மை சூழ்ந்திருக்கும்.

எனவே இறை சிந்தனையோடு தொடர்பில் இருப்போம்

எதிர் மறை சிந்தனையை தவிர்ப்போம்.

நம்மை சுற்றியுள்ள ஆராவை சக்தி ஏற்றினால் நமக்கு புற தாக்கங்கள் உள்ளே நுழையாது.

இதற்கு தம்மை உணர்தல் அவசியமாகும், இதை செய்ய மௌனம் , தியானம் உதவி செய்கிறது...

ஞானநூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பது நம்மை இறை சக்தியோடு சேர்க்கும்.

சாதுக்களின் தரிசனம் நம் ஆராவில் உள்ள தீய  பதிவுகளை நீக்கும்.

தீப வழிபாடு, ஆரத்தி எடுப்பதும் நம் ஆராவை சரி செய்யவே நம் முன்னோர்கள் செய்து வந்தனர்.

தீய எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனிதரோடு பழகாமல் இருப்பதும்,

தீய எண்ணங்களை சிந்திக்காமல் இருப்பதும் இறைவனின் தொடர்புக்கு வழி வகுக்கும்.

பேசும் நல்ல வாரத்தைகளும், காணும்  காட்சிகளும், வசிக்கும் அமைதியான இயற்கை  சூழலும் நம்மை சுற்றி நல்ல இறைசக்தியை அதிகமாக்கும்.🌹

படித்ததில் உணர்ந்தது!

வாழ்க வளமுடன்! !

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...