Sunday, September 30, 2018

*August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா?*

ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்.

முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை.

பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.

அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது.

இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.

அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.

சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே.

August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.

மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..

அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.

வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

மாறாக march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.

மேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் (august, march ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா? (வாக்கியத் தொடக்க எழுத்து capital letterல்தானே எழுதப்பட வேண்டும்!)

அப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நான் கூட அதனால்தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்திருக்கிறேன்.

சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும்.

பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள்.

அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து.

பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.

Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.

Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.

Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?)

Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.

இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
A turkey may march in Turkey in May or March!

(Turkey என்பது துருக்கி நாட்டையும் turkey என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?)

VERBATIM
Verb என்பதற்கும் verbatim என்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தொடர்பு உண்டு யார் சொன்னது?

Verbatim என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.

அப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.

அப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பா சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .

அப்பா ஒப்புக்கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார்.

“கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும்போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னுதான் சொன்னாங்க’’ என்றான்.

அந்த மகன் சரியான Verbatim-காரன்! அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப்பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோதான் VERBATIM.
REFUSE REFUTE REBUT

Refuse என்றால் மறுப்பது. He refused the invitation. I refuse to accept your view.

Refute என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். The testimony of the witness was refuted.

Rebut என்றால் விவாதம் செய்து ஒன்றை மறுப்பது.

Examples of pairs of capitonyms are:

Turkey (the country) and turkey (the bird)
China (the country) and china (as in porcelain).

Tuesday, September 25, 2018

*நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 *

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986
இச்சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது.

ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே.

சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.

லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-

1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-

5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-

10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?


1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்:
மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம்:
மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

வில்லங்க சான்றிதழால் வந்த வில்லங்கம்!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?

விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால்?

அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?
நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?
சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2007-ல்ஒரு ரூபாய்க்காக ஒரு வழக்கு!
கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் திரு. A.S. ரவி எனபவர் தொடர்ந்த வழக்கை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இவர் 22-1-2007 ல் கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு லைன் டெஸ்டர் ( LINE TESTER ) ஒன்றை வாங்கினார். அதன் விலை ரூபாய் 33 /- என கூறி பணத்தை பெற்றுக கொண்டு ள்ளனர். அதற்கான ரசீதும் பெறப்பட்டது. ஆனால் அதன் அட்டை பெட்டியில் " Maximum Retail Price Rs. 32 /- including all taxes ) " என அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியும் அதிகப்படியாக வசூலித்த் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவில்லை

தன்னிடம் அதிகப்படியாக வாங்கிய ஒரு ரூபாயை திருப்பி தருமாறு 31-1-2007 மற்றும் 11-2-2007 ஆகிய தேதிகளில் கடிதங்களை அனுப்பியுள்ளார். மேற்படி கடையினர் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவும் இல்லை. கடிதத்திற்கு பதிலும் அளிக்கவில்லை.

பாக்கிங்கில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக எந்த ஒருபொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம்.

இதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில தொழிலாளர் நலத்துறைக்கு என்பதால், அப்பகுதியிலுள்ள தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளருக்கு 22-2-2007 ல் புகார் செய்துள்ளார். அதன் பின் 19-3-2007 ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பி யுள்ளார். நடவடிக்கை விபரம் எதுவும் ஆய்வாளரால் தெரியப்படுத்தப்பட வில்லை.

எனவே தொழிலாளர் நலத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பித்தார். மேற்படி கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1800 /- அபராதம் விதிக்கப்பட்டதாக, தகவல் அளிக்கப்பட்ட்து.

இருப்பினும் ஒரு ரூபாய் கடைக்காரரால் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எனவே திரு. ரவி தன்னிடம் பெறப்பட்ட அதிகப்படியான தொகையான ரூபாய் ஒன்றை திருப்பியளிக்கவும், நஷ்ட ஈடு மற்றும் வழ்க்குக்கான தொகையை வழங்ககோரியும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை க்குப்பின் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் ஒன்றை மனுதாரருக்கு திருப்பியளிக்கவேண்டும்.
2. வழக்கு செலவுத்தொகையாக 1000 /- வழங்கவேண்டும்.
3. நுகவோர் நல நிதிக்கு 5,000 /- வழங்கவேண்டும் என கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.
_________________________

Friday, September 21, 2018

*நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி?*

*அதனால் கிடைக்கும் பலன் என்ன?*

கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான்.

நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.

அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.

எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.

*எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:*

*சூரியனை* வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

*சந்திரனை* வணங்கினால் புகழ் கிடைக்கும்.

*செவ்வாயை* (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

*புதனை* வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

*குரு பகவானை* (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

*சுக்கிரனை* வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

*சனி பகவான்* வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

*ராகுவை* வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

*கேதுவை* வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

*பலன் தரும் பாடல்*

திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:

*வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி*
*மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்*
*உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே*
*ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே*

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

*"மதுரை "*

*உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?*

"The World's only living civilization"
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*"The World's only living civilization"*
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
"The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு *"தூங்கா நகரம்"* என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..
👍🏽🌞🌻🌹👍🏽

*திசை காட்டி*

உங்களுடைய வீட்டில்,கிழக்கு தலை வைத்து தினமும் தூங்கினால்,செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;அப்படி அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது;எந்த ஒரு திருஷ்டியாலும் தடுக்க முடியாது;

மேற்கே தலைவைத்து தினமும் வீட்டில் தூங்கினால்,ஆயுள் அதிகரிக்கும்;

வடக்கே தலை வைத்து எப்போதும் தூங்கவே கூடாது;நோய்கள் வளரும்;மன நலம் பாதிக்கப்படும்;

தெற்கே தலைவைத்து வீட்டில் தினமும் தூங்கினால்,புகழ் அதிகரிக்கும்;

உங்களுடைய வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும்;

மேற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்;

வடக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் வளரும்;உடலின் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்;

தெற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற வீண் பழிகள் வந்து கொண்டே இருக்கும்;

உணவகங்கள்,மெஸ்கள்,ஆஸ்டல்கள்,சாலையோர உணவகங்களில் சாப்பிடும் போது இந்த விதிகள் பொருந்தாது;

தெற்கு நோக்கி உங்கள் ஆடைகளை துவைத்தால் உங்களுக்கு வீண் சச்சரவுகளில் சிக்கும் சூழ்நிலை அடிக்கடி உண்டாகும்;

ஆண்டிராய்டு யுகமாக இருந்தாலும்,திசைகள் மாறுமா? சித்தர்கள் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகள் இவை;நமது பாரம்பரிய பழக்கத்தை நாம் முறையாக பின்பற்றுவோம்;

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...