காகிதத்தில் மையூற்றி
எழுதப்பட்ட மாயக்காரர்கள்
ஒரு துளி நீருக்கும்
கிழிந்து போகக் கூடியவர்கள்
கொஞ்சமாய்
அடிக்கும் காற்றுக்கும்
இடம் பெயரக் கூடியவர்கள்
பாசத்தைப் பங்கு போட்டு
பத்திரமாய்
பத்திரப் படுத்தி வைப்பவர்கள்
அவசரத்திற்குத் தேடும் போது
கண்களுக்குத் தென்படா
அரிதானவர்கள்
இணையவழி காதலால்
ஆதாரங்கள் எதுவுமின்றி
உழல்பவர்கள்
வழவழப்பாய்
வண்ண வண்ணமாய்
விதவிதமான காட்சிகளாய்
விலையேறிப் போன
விலைபோகா காகிதங்களாய்
மனிதர்களிங்கு..
தி. இராஜபிரபா
தேனி
No comments:
Post a Comment