Sunday, April 1, 2018

April-2_சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் - ஏப் 2:

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.1967 ஆம் ஆண்டு முதல் டானிஷ் குழந்தை எழுத்தாளர் ஹான்ஸ் கிருஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினத்தை சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக கொண்டாடுகின்றனர்.(சர்வதேச புத்தக தினம் ஏப்ரல் – 23 என்பது கூடுதல் தகவல்).

வருடாவருடம் IBBY (International Board on Books For Young People) என்னும் நிறுவனத்தில் இணைக்கப்பட்டுள்ள 70 நாடுகளில், ஏதேனும் ஒரு நாட்டில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படும். சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள இந்தியாவும் இதில் முக்கிய அங்கத்தினர். இந்த வருடம் லாத்வியா நாட்டிற்கு இந்த விழா நடத்தும் பெருமை வந்து சேர்ந்துள்ளது.(Latvia is the sponsor for International Children's Book Day 2018)

புத்தகம் என்பது பள்ளிக்கூடத்திற்கு பொதி சுமப்பதை போல பிஞ்சுகள் எடுத்து செல்லும் புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்கள் மொட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டும்.புத்தங்களின் பயன்களை ஊர் அறியும். அறிந்தும் செயல்படுத்த முடியாமல் இருப்பது மாபெரும் தவறு. சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தினால், குழந்தைகள் வளர வளர ஆர்வமும் பெருகும். புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற போது, அவர்களை புத்தக புழுவாகவும் மாற்றிவிடக்கூடாது.

தற்போது தமிழில் குழந்தைகளுக்கான தரமான புத்தகங்கள் நிறைய வரத் துவங்கியுள்ளது.(பாரதி புத்தகாலயம், Prodigy புத்தகங்கள், நேஷ்னல் புக் டிரஸ்ட்) ஆனாலும் இந்த புத்தகங்கள் போதவே போதாது. மேலும் மேலும் நிறைய குழந்தை எழுத்தாளர்கள் உருவாக  வேண்டும். வாழ்வை செம்மைப்படுத்தும், ரசிக்க தூண்டும், அறிவை விஸ்தரிக்க உதவும், நம்பிக்கை தரும் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, ஆனால் அதற்கான துவக்கம் எந்த ஒரு நாளாகவும் அமைந்துவிடலாம்.

வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் தொலைக்காட்சிகள் முன்னே அமர்ந்து நேரங்களை தொலைத்து வருகின்றனர். கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது.இதனை தாண்டி புத்தகங்களோடு பழக்கம் கொள்ள நாம் ஊக்க கொடுக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். புத்தகம் ஒன்றினை எடுத்து நீங்கள் படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும்.

இன்று என்ன செய்யலாம்?
உங்களை சுற்றி இருக்கும் குழந்தைகளைக்கு உங்களால் முடிந்த புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்குங்கள். நாமும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை கொண்டாடுவோம்.

புத்தகங்களை சுமையாக நினைக்கும் நிலையினை மாற்றி புத்தகங்களை சுவையாக நினைக்கும் காலத்திற்கு நாம் நம்மால் முடிந்த பங்கினை புரிவோம். புதுவை அறிவியல் இயக்கமும் குழந்தைகளுக்கான எண்ணற்ற அரிய பல புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வேண்டுவோர் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...