ஆரூரா.. தொண்டீசா..
*நடராசர் அபிஷேகத்தை எப்படி சிறப்பாக செய்யலாம்*
சிவனடியே சிந்திக்கும் மெய் அன்பர் பெருமக்களே.
வருகிற 28.2.18 புதன் கிழமை.. மாசி மாதம் 16. காலை 10.52க்கு மேல் சதுர்தசி திதியில்
*அனைத்து சிவ ஆலயங்களில் எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவனுக்கு நடராஜர் அபிஷேகம் - அலங்காரம் சிவாகமம் முறையில் மிக சிறப்பாக நடைபெறும்.*
அது சமயம் பக்த கோடிகள் நடராஜர் பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்கு பெற்று புண்ணியத்தை பெறுவர்..
ஒரு சில அன்பர்கள் முன் செய்த தவத்தின் பயனாக நடராஜரை இல்லத்தில் வைத்து பூஜை செய்வது வழக்கம்..
அத்தகைய அன்பர்களுக்கு சிவாகமம் முறைப்படி பூஜை செய்ய ஆசைப்படுவார்கள்.
அத்தகைய அன்பர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்யலாம்..
*1. நடராஜர் அபிஷேகம் செய்யும் அன்பர்கள் பூஜை செய்யும் இடத்தில் கோசலம் கலந்த பசுஞ் சாணம் இட்டு தூய்மை செய்து அரிச மாவினால் கோலம் இட்டு அழகு படுத்த வேண்டும்.*
*2. மாந்தலை, தென்னைங்குறுத்தால் அலங்காரம் செய்து தொங்கவிட வேண்டும்.. இப்படி செய்வதால் விழா கலைகட்டும்.*
*3. அடியார்கள் , சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் , மக்கள் என நிகழ்ச்சியில் பங்குபெற செய்ய வேண்டும்..*
*4. தில்லை பதிகங்கள் முழுவதும் அபிடேகம் நடக்கும் பொழுது பாடி பரவ வேண்டும்..*
*5. அலங்காரம் செய்யும் நேரத்தில் நடராஜர் பற்றிய செய்திகளை குறிப்பிட்டு சொற்பொழிவு பேச வேண்டும்..*
*6. சிதம்பரம் நடராஜருக்கு வெட்டி வேர் மாலை சாற்றி வழிபடுவது போல் , தாங்களும் தங்களுடயை நடராஜருக்கு வெட்டி வேர் மாலை சாற்றி வழிபடுவது சால சிறந்தது.*
*7. நடராஜருக்கு பதினாறு வகையான சோட உபச்சாரங்கள் செய்து மகிழுங்கள்.*
*8. நடராஜருக்கு அர்ச்சனை செய்ய விருப்பம் உள்ள அன்பர்கள் நடராஜனின் 108 தாண்டவங்கள் கூறி மலர் அர்ச்சனை செய்து வழிபடலாம்..*
ஆதாரம் : திருவாவடுதுறை ஆதீன மடத்தில் 108 தாண்டவங்கள் கூறி வழிபாடு செய்வது வழக்கம் உள்ளது..
*11. மேலும் நடராஜருக்கு 108 , 1008 அர்ச்சனை வழிபாடு உள்ளது.. விருப்பம் உள்ளவர்கள் செய்து வழிபடுங்கள்.*
*12. நடராஜர் வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு நடராஜர் படம், வெள்ளை நிற திருநீற்று பை , கண்டமணி உருத்திராக்கம் , மலர் வெளியிடுவது போன்றவை அனுபர்களுக்கு தந்து இறை அருள் பெறலாம்..*
*13. நடராஜர் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி இளையான் குடிமாற நாயனார் குருவருள் பெறுமாறு வேண்டுகிறோம்.*
*14.முடிந்த அளவில் ஒரு அன்பருக்காவது வெள்ளை வேஷ்டி துண்டு 9×5 தந்து நேச நாயனாரின் அருள் பெறுமாறு வேண்டுகிறோம்.*
*15. நடராஜருக்கு இண்டை மாலை , புஜங்க மாலை, குஞ்சித மாலை , திருவடி மாலை , ராஜாங்க மாலை , வெட்டிவேர் மாலை , தாமரை மாலை , வில்வமாலை போன்றவற்றால் அலங்காரம் செய்து வழிபடுங்கள்..*
*16. நடராஜர் வழிபாட்டில் சங்கல்பமாக நந்தி வேண்டிய 16 பேறுகள் கண்டிப்பாக கூற வேண்டும்.*
குறிப்பு: அன்பர்கள் கண்டிப்பாக வருடம் , மாதம் , நட்சத்திரம் , திதி , பட்சம், மாலையா அல்லது காலையா, என்று சங்கல்பமாக
கூற வேண்டும்.
*17. நடராஜருக்கு வெண் பட்டு அங்க வஸ்திரம் மற்றும் அம்பாளுக்கு பட்டு புடவை சாற்றுவது சாலச்சிறந்தது.*
*18. மேலும் அடுத்த நடராஜர் அபிடேகம் எப்பொழுது நடைபெறும் என்று கண்டிப்பாக அன்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..*
இதுபோல் நடராஜருக்கு அபிடேக தீபாரதனை செய்து வழிபட்டு இறையருள் பெறுவோம்..
என்றும் இறை சிந்தனையில்
தொண்டீசன்.. ஈரோடு..
No comments:
Post a Comment