*தமிழக ஊடகங்களுக்கு ஒர் வேண்டுகோள்....*
*எங்கள் 9அம்ச கோரிக்கையில் எந்த கோரிக்கையாவது ஊதிய உயர்வுக்கான கோரிக்கை இருக்கா என்று பாருங்கள்...*
*பொதுமக்களுக்கு உள்ளதை உள்ளவாறு கூறுவது ஊடகங்களின் கடமை*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை 1* *ஏன் சாமி 3500 பள்ளிகளை இணைத்து மூடுகிறீர்கள் என்று கேட்டால் ?*
*ஆசிரியர்களுக்கு ஏற்கனவே சம்பளம் அதிகம் என்கிறார்*
*மாண்புமிகு..."*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
2
ஏன் சாமி , எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்காக திறந்த 3500 சத்துணவு மையங்களை மூடறிங்க என்றால் ?
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
2
3 அரசாணை 56
போட்டிங்கலே யாருக்கும் இனி அரசு வேலை கிடையாது என்று அந்த ஆனையை இரத்து செய் என்று கேட்டால்
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
மாண்புமிகு..
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
2
4 ஆட்சிக்கு வந்தால் இந்த இலவசம் , அந்த இலவசம் தருவோம்னு வாக்குறுதி கொடுத்தீர்கள்
அதே போல ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கு
cps
இரத்து செய்து
பழைய ஓய்வூதியம் மாற்றி தரப்படும் என்று கூறியது என்ன ஆனது என்றால்
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு..*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
5 விதிமுறைகளில் இல்லாத LKG , UKG களுக்கு இடைநிலை ஆசிரியர்களை ஏன் பயன்படுத்துகிரீர்கள். புதியதாக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டால்
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு.*.
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
2
6 தொடக்க கல்விக்கென்று தனி துறையை உருவாக்கிய (எதிர்கட்சி உருவாக்கி இருந்தால் கூட பரவாயில்லை, தங்களின் மானசீக அம்மா அவர்கள் கடினப்பட்டு நல்லதுக்காக உருவாக்கிய தொடக்க கல்வியை அழிக்கின்ற)
அரசாணை எண் 100,101 போன்றவற்றை இரத்து செய்து பழைய நிலையே (தங்களின் அம்மாவின் ஆசைகினங்க) தொடரவேண்டும் என்றால்
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு..*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
7 சரி சாமி எல்லாம் போகட்டும் மற்ற மாநிலங்கள் எல்லாம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த cps தொகையை மத்திய அரசிடம் கட்டி ரசீது பெற்று வைத்துள்ளனர் ஆனால் எங்கள் பணம் 30ஆயிரம் கோடி எங்கே என்றால் ?
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு..*
*ஜாக்டோ ஜியோ கோரிக்கை*
8 7வது ஊதிய குழுவின் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று நாங்கள் கேட்டதை விட உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் கூறினீர்கள், அதன் படி 21 மாத நிலுவை தொகை வழங்கவில்லை, இடைநிலை ஆசிரியர் ஊதிய வேறுபாட்டை களையவில்லை அதனை (நீங்கள் கூறியதை தான்) நாங்கள் கேட்கிறோம்
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறார்
*மாண்புமிகு..*
எங்களை பார்த்து எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் என்கிறீகள்
மாண்புமிகு.. அவர்களே...
மக்களும் பிற கோரிக்கைகளை பின்னுக்கு தள்ளி சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் இவங்களுக்கு போதாதாம்
என்று ஏளனம் செய்யும் அளவிற்கு அவர்களின் காதுகளுக்கு ஒற்றை கோரிக்கையை மட்டும் மனதில் பதியவைத்த பெருமை
உங்களையே சாரும் ..
நாங்கள் போராடுவது எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் எதிர்கால சந்ததிகளுக்கும் என்று உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும்
ஆனால் அரசியல்வாதிகளால் குழப்பப்படும் மக்களுக்கு உடனடியாக புரிய வாய்ப்பில்லை...
எப்படியும்
JACTO GEO வின் கோரிக்கைகளே
*வெல்லும்*
இல்லையேல் எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும்
அரசே அடுத்த தேர்தலில்
*வெல்லும்*
💪💪🤝🤝
No comments:
Post a Comment