Wednesday, January 9, 2019

*ஏசு என்பவரே ஒரு கற்பனைதான்:*

இங்கிலாந்து முதல் ஈராக் வரை நீண்டிருந்த பேரரசாகிய ரோமப் பேரரசின் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?

ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன.. எனவே ஏசு என்பவர் வரலாற்று மனிதரல்ல, மாறாக கற்பனை மனிதராகவே இருந்திருக்கிறார். இதை இன்னும் தெளிவதற்கு நாம் புத்தரிலிருந்து தொடங்க வேண்டும்.

புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார். ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள். இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்; புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை. புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார். மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார் (காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும். கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம்  ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார். புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன, அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”

ஆக ஏசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவரல்ல என்பது உறுதியாகிறது. அடிமைகளின் எழுச்சியை அடக்குவதற்கு புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட கதைகளுடன் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து விளங்குகிறது. இது திருச்சபைகளுக்கும் தெரிந்து தான் இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அதை அம்பலப்படுத்தும் விதத்தில் கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச் சுருள்கள் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களை மறைத்து விட்டனர். இதன்பின்னரும் இன்னொரு கேள்வி தொக்கி நிற்கிறது. இந்திய நேபாள எல்லையில் நிகழ்ந்த கதைகளும் நூல்களும் பாலஸ்தீனத்திற்கு எப்படி பரவியது? இதற்கும் வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.

கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து  தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம்  திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான். இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.

ஏசு நாசரேத் எனும் ஊரில் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும். எனவே பௌத்தக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பேடுகள் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள். ஏசு பொய் என்றால் கட்டமைத்த கிருஸ்துவ மதமும் பொய் ஆகிறது. ஏசு அப்படி இப்படி என்று மக்கள் கதைக்கும் கதையை தன் வேதமான குரானில் ஏற்றிய முகம்மதுவின் இஸ்லாமும் பொய் என்பதும் தெளிவாகிறது...

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...