Sunday, October 28, 2018

*எது கெடும்.. எதனால் கெடும்*

பாராத பயிரும் கெடும்..🎯

பாசத்தினால் பிள்ளை கெடும்..🎯

கேளாத கடனும் கெடும்..🎯

கேட்கும்போது உறவு கெடும்..🎯

தேடாத செல்வம் கெடும்..🎯

தெகிட்டினால் விருந்து கெடும்..🎯

*அது மட்டுமா* ?
👌👌👌👌👌

ஓதாத கல்வி கெடும்..🥁

ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்..🥁

சேராத உறவும் கெடும்..🥁

சிற்றின்பத்தால்  பெயரும் கெடும்..🥁

நாடாத நட்பும் கெடும்..🥁

நயமில்லா சொல்லும் கெடும்..🥁

கண்டிக்காத பிள்ளை கெடும்..🎯

கடன்பட்டால் வாழ்வு கெடும்..🎯

பலனற்ற பிரிவால் இன்பம் கெடும்..🎯

அளவற்ற பணத்தால் அமைதி கெடும்..🎯

சினமிகுந்தால் அறமும் கெடும்..🎯

சிந்திக்காத செயலும் கெடும்..🎯

சோம்பினால் வளர்ச்சி கெடும்..🎯

சுயமில்லா வேலை கெடும்..🎯

மோகித்தால் முறைமை கெடும்..🥁

முறையற்ற உறவும் கெடும்..🥁

அச்சத்தால் வீரம் கெடும்..🥁

அறியாமையால் முடிவு கெடும்..🥁

*அதோடு* ..
👌👌👌👌

உழுவாத நிலமும் கெடும்..🎯

உழைக்காத உடலும்  கெடும்..🎯

இறைக்காத கிணறும் கெடும்..🎯

இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்..🥁

இல்லாலில்லா வம்சம் கெடும்..🥁

இரக்கமில்லா மனம் கெடும்..🎯

தோகையினால் துறவு கெடும்..🎯

துணையில்லா வாழ்வு கெடும்..🎯

ஓய்வில்லா முதுமை கெடும்..🥁

ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்..🥁

அளவில்லா ஆசை கெடும்..🎯

அச்சப்படும் கோழை கெடும்..🎯

இலக்கில்லா பயணம் கெடும்..🥁

இச்சையினால் உள்ளம் கெடும்..🎯

உண்மையில்லா காதல் கெடும்..🎯

உணர்வில்லாத இனமும் கெடும்..🥁

செல்வம்போனால் சிறப்பு கெடும்..🥁

சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்..🎯

*அப்படியே* ..
👌👌👌👌

தூண்டாத திரியும் கெடும்..🎯

தூற்றிப்பேசும் உரையும் கெடும்..🎯

காய்க்காத மரமும் கெடும்..🎯

காடழிந்தால் மழையும் கெடும்..🥁

குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்..🎯

குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்..🎯

வசிக்காத வீடும் கெடும்..🥁

வறுமை வந்தால் எல்லாம் கெடும்..🎯

குளிக்காத மேனி கெடும்..🤭

குளிர்ந்து போனால் உணவு கெடும்..🤭

பொய்யான அழகும் கெடும்..🤭

பொய்யுரைத்தால் புகழும் கெடும்..🤭

துடிப்பில்லா இளமை கெடும்..👌

துவண்டிட்டால் வெற்றி கெடும்..👌

தூங்காத இரவு கெடும்..🥁

தூங்கினால் பகலும் கெடும்..👌

கவனமில்லா செயலும் கெடும்..🎯

கருத்தில்லா எழுத்தும் கெடும்..✍

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...