Friday, July 28, 2017

யார் சுகவாசி?



☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி!

☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!

☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!

☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!

☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!

☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!

☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!

☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!

☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!

☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி!

☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி!

☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!

☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!

☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!

☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!

☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!

☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!

☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!

☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!

☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!

☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!

☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!

☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!

☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...