*கரும்பூஞ்சை அல்லது Mucormycosis:*
#atconnect
From Team Atconnect
1.கரும்பூஞ்சை என்றால் என்ன ? எதனால் ஏற்படுகிறது?
கரும்பூஞ்சை வித்துக்கள் உள்ளிழுக்கப்படுதல்,
உட்கொள்ளப்படுதல் அல்லது சில சமயம் நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக உள்செல்லுதல் போன்ற காரணங்களால் கரும்பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
நிபுணர்கள் கூற்றுப்படி, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கு அதிகப்படியாக பயன்படுத்தப்படும் மருந்துகளாலும்
, நோய் எதிர்ப்பாற்றல் இல்லாத எச் ஐ வி நோயாளி, நீரிழிவு நோயாளி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் மற்றும் புற்று நோய் கொண்டவர்களும் மற்றும் இயந்திர வென்டிலேட்டர்களுடன் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது.
இது மனிதர்களுக்குள்ளோ அல்லது விலங்கினதிற்குள்ளோ பரவக் கூடிய நோய் இல்லை என்றாலும் ,இந்த கரும்பூஞ்சை வித்துக்கள் இருக்கும் காற்றிலிருந்தோ அல்லது சுற்று சூழலிலிருந்தோ பரவலாம்.
*அறிகுறிகள்* :
* மூச்சுக்குழல் அறை அழற்சி:
மூக்கடைப்பு மற்றும் கரிய இரத்தம் வெளியேறுதல்.
*முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் வீக்கம் மற்றும் தாடையில் வலி.
*தலைவலி
*முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் உணர்வின்மை,வலி மற்றும் வீக்கம்.
*கண்கள் சிவப்பாக மாறுவது,கண்களை அசைக்கும் போது வலி மற்றும் கண்களை சுற்றி வீக்கம் தோன்றுதல்.
*மங்கலான பார்வை மற்றும் இரட்டை பிம்பம்.
*வாயில் கரியப்புண் ஏற்பட்டு வாயிலும் மூக்கிலும் சீழ் வடிதல்.
*வாய் மற்றும் மூக்கு பகுதி வெளிறி சிவப்பு நிறமாக மாறுதல்.நோயின் தீவிரம் அதிகரிக்க கருப்பாக மாற தொடங்குதல்.
*சில சமயம் காய்ச்சல் பல் வலி மற்றும் பல் இழப்பும் ஏற்படுதல் .
*நுரையீரல் தொற்று,நெஞ்சு வலி,
நுரையீரலுறை நீரேற்றம், இரத்துடன் உமிழப்பட்ட எச்சில் மற்றும் மூச்சு திணறல் உண்டாதல்.
* அரிதாக இரைப்பை குடல் மற்றும் அடிவயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்படுதல்.
*கரும்பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை:*
முதலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் கரும்பூஞ்சை தொற்றுக்கு உள்ளாகி உள்ளோம் என சிறிது சந்தேகம் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது.இல்லையென்றால் இது தீவிரமாகி உயிரிழப்புக்கு வித்திடும்.ஏனெனில் காலம் கடத்தாமல் இருப்பது இங்கு மிக முக்கியம்.
பிறகு மருத்துவர் பரிசோதனை செய்து நாசி குழி,அதை சுற்றியுள்ள பகுதி, நீர் சேர்க்கை, மூளை பகுதியை MRI ஸ்கேன் மற்றும் மார்பு பகுதியை CT ஸ்கேன் எடுக்க செய்வார்.
தேவைப்பட்டால்
உடற்குழாய் உள்நோக்கல் (எண்டோஸ்கோபி) தேவைப்படும். தொற்றுக் கண்டறியப்பட்டால் தொற்று பாதிப்படைந்த திசுக்களை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.உடனடியாக மருத்துவர் தொற்றானது மூளை, கண் மற்றும் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுப்பார்.Liposomal Amphotericin B என்ற மருந்து தொற்றை எதிர்க்க பயன்படுகிறது.
வழக்கமான Amphotericin தேவையில்லாதது.இதற்கு மிக குறைந்த CNS (Central Nervous system) ஊடுறுவல் தன்மையே உள்ளது.
எனவே மருத்துவர்கள் Liposomal Amphotericin B. Isavuconazole/Posaconazole ஐ பரிந்துரைக்கின்றனர்.இருந்தாலும் சரியான தரவுகள் இல்லை.இந்த மருந்துகள் 4 முதல் 6 வாரங்கள் வரை கொடுக்கப்படுகிறது.
*தற்காப்பு நடவடிக்கைகள்:*
*தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கீழே
சில அறிவுரைகள்:*
* புழுதி, மண் மற்றும் தூசுக்கள் உள்ள இடங்களை தவிர்க்கவும்.கட்டாயம் N95 மாஸ்க் அணியவும்.
*தோட்ட வேலைகளை தவிர்க்கவும்,தவிர்க்க முடியாத சூழலில் கையுறை, முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணியவும்.
*Centre for Disease Control அறிவுரைப்படி நீரிழிவு நோயாளிகள்,நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் , ஸ்டீராய்டு எடுப்பவர்கள் மற்றும் Iron Chelators உபயோகிப்பவர்களை தொற்று அதிகம் தாக்கலாம்.
* துணி மாஸ்க்கை சரியான முறையில் துவைத்து பயன்படுத்த வேண்டும்.ஈரமான சுகாதாரமற்ற மாஸ்க் இதன் இனப்பெருக்கத்திற்கு வழிவகை செய்யும்.
* N95 மாஸ்க் மற்றும் சர்ஜிக்கள் மாஸ்க் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.ஈரம் மற்றும் அழுக்கானதும் சரியான முறையில் அப்புறப்படுத்தி விடவும்.
*காற்றோட்டமான சுத்தமான இடத்தில் இருக்க வேண்டும்.
*கோவிட் தொற்றில் இருந்து குணமானவர்கள் தான் பாதிக்கின்றனர் என பலர் கூறினாலும் அதற்கு சரியான தரவுகள் இல்லை. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்டவர்களை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு நோயெதிர்ப்பு குறைந்து இருப்பதால் கரும்பூஞ்சை எளிதில் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே தான் ஈரப்பதமூட்டியில்( Humedifier) குழாய் தண்ணீருக்கு பதில்
Sterile நீரை பயன்படுத்த பரிந்துரைக்கப் படுகிறது.
* *மருந்துகளை பெறும் வழிமுறை:**
Liposomal Amphotericin B எனும் மருந்து தற்போது பற்றாக்குறையில் இருப்பதால் சிலர் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தவிர்க்க அரசே அதன் பொறுப்பில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
அதை கீழ்க்கண்ட வழிமுறைகளில் பெறலாம்.
* சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையே
நோயாளியின் பெயரில் Drug Officer/CMO க்கு மருந்தைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பலாம்.
*CMO/drug officer மருந்து சீட்டையும் அது தேவைப்படும் நோயாளியின் நிலை பற்றியும் சரிப் பார்ப்பார்.
*பிறகு சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு மருந்து அளிக்கப்படும்.
*ஆரோக்கியமான பழக்கங்கள்* :
பல தவறான புரிதல்கள் இந்த கரும்பூஞ்சை தொற்றை பற்றிப் பரப்பப்படுகிறது. சமைக்காத உணவை உட்கொண்டால் இது பரவும் என்பது வதந்தி.அதைப் பற்றி சரியான தரவுகள் இல்லை.மேலும் ஆக்சிஜன் பயன்படுத்தியவர்களுக்கு இது உண்டாகும் என சரியாக சொல்ல முடியாது, வீட்டுத் தனிமையில் இருந்தவர்களும் இந்த தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது போன்ற காலக் கட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
*எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் விட்டமின் டி / பால் உணவுகளும் நல்லது.
*நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
*யோகா மற்றும் உடற்பயிற்சிகள் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் .
*தவறான செய்திகளை நம்பி சமூக ஊடகங்களில் பரப்பி மக்களைப் பதட்டமடைய செய்ய வேண்டாம்.
*நீரிழிவுக்கான மற்றும் Antiretroviral க்கான மருந்துகளை தவிர்க்காமல் எடுக்கவும்.
*எல்லா மூக்கடைப்பும்
கரும்பூஞ்சை தொற்று அல்ல.
*எதை தவிர்க்க வேண்டும்:*
* சாதாரண பூஞ்சை தொற்றுக்கு எதிரான , Voriconazole Itraconazole போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்.இது கரும்பூஞ்சை தொற்றை தீவிரப் படுத்தலாம்.
*எந்த மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம்*
No comments:
Post a Comment