Wednesday, January 10, 2018

நெகிழ வைக்கும் தந்தை மகன் உறவு...


இதில் நீங்கள் எப்படி?
உறவின் இடைவெளியில் தந்தையும் மகனும் !!
அப்பா :

அதிகம் புரிந்து கொள்ளப்படாத உறவு. அப்பாவை திட்டாமல் கடந்து விட்ட பதின் பருவமென்பது நிச்சயம் யாருக்குமே இருக்காது. நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக் கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.

எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் பிள்ளைகளுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி, எவ்வளவு பாசமிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதில் ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொள்வது தான் அப்பாவின் பாசம்.

உங்கள் பெயருடன் பொங்கல் திருநாள் வாழ்த்து, கவிதைகளை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப உடனே
இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரிணாம வளர்ச்சியில் தந்தையும் மகனும் :

4 வயதில் : அப்பா மாதிரி ஒரு நல்லவர் உண்டா என்று நினைக்கிறது.

6 வயதில் : அப்பாவிற்குத் தெரியாத விஷயமே கிடையாது.

10 வயதில் : அப்பா நல்லவர்தான், ஆனால் முன்கோபக்காரர்.

12 வயதில் : நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டார். ஆனால் இப்போது.....!

16 வயதில் : அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!

18 வயதில் : அப்பா கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.

20 வயதில் : அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம் வாழ்ந்தார்களோ?

25 வயதில் : எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான். எப்போதுதான் அப்பா உலகத்தைப் புரிந்துகொள்ளப் போகிறாரோ?

30 வயதில் : திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு, என் பையனை சமாளிக்கவே முடியவில்லையே. நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்!

40 வயதில் : அப்பா எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என்று தோன்றும். இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை எப்படிக் கண்டித்து, கட்டுப்பாடுடன் வளர்த்தார் என்பது அதிசயமாகவே உள்ளது.

45 வயதில் : என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர், அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்கு கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.

50 வயதில் : நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட வேண்டியிருக்கிறதே. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.

55 வயதில் : அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில் சந்தேகமில்லை.

60 வயதில் : கண்ணீருடன் என் அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தாய் தந்தையிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.

தந்தையை நேசிக்கும் மகன், மகள்களுக்கு சமர்ப்பணம் !!

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...